திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்ற பெண் பிரதமருக்கு விரைவில் திருமணம்!

திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொண்ட நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.


நியூசிலாந்து பிரதமராக இருப்பவர் ஜெசிந்தா ஆர்டெர்ன். தற்போது இவருக்கு 38 வயதாகிறது. இவர் 41 வயதாகும் கிளார்க் கோஃபோர்டு என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.

திருமணம் செய்து கொள்ளாமலேயே ஜெசிந்தா காதலனுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார். இதனால் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சுமார் ஒரு வருடம் ஆக உள்ள நிலையில் ஜெசிந்தா தற்போது திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனை முன்னிட்டு அவரது நீண்ட நாள் காதலருடன் திருமண நிச்சயம்  கொண்டுள்ளார். ஆனால் திருமணத்திற்கான தேதியை தெரிவிக்கவில்லை. விரைவில் திருமணம் நடைபெறும் என்று வெட்கத்துடன் ஜெசிந்தா கூறியுள்ளார்.