மகளை வெளியூருக்கு அழைத்துச் சென்று காரில் சடலமாக கொண்டு வந்த தந்தை! மருமகனுக்காக மாமனார் செய்த பயங்கரம்!

கடலூர் மாவட்டடத்தில் கள்ளக் காதலை கைவிட மறுத்த மகளை தந்தையை அடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வீரமுடையான்நத்தம் பகுதியில் ஜோதி, ரேவதி தம்பதி வசித்து வந்தனர். ரேவதிக்கும் தினேஷ்குமார் என்பவருக்கும் முறையற்ற உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மனைவியை பற்றி ஜோதி மாமனார் கண்ணனிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மகள் ரேவதியை வெளியூருக்கு காரில் அழைத்து சென்றார் தந்தை கண்ணன். பின்னர் தினேஷ்குமாருடனான முறையற்ற உறவை கைவிடுமாறு கேட்டுள்ளார் கண்ணன். இதனால் கோபப்பட்ட ரேவதிக்கும் தந்தைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கோபத்தின் உச்சிக்கு சென்ற கண்ணன் மகள் என்றும் பாராமல் அடித்து கொன்றுள்ளார். பின்னர் மகளின் உடலை காரில் ஏற்றிகொண்டு மீண்டும் வீரமுடையான் நத்தத்துக்கு திரும்பினார். காரில் ரேவதி பிணமாக கிடந்தை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  

போலீசார் விரைந்து சென்று ரேவதியின் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். ரேவதியின் தந்தை கண்ணனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மகளை கொன்றதை ஒப்புக்கொண்டார் கண்ணன்.

இதையடுத்து கண்ணனை போலீசார் கைது செய்தனர். தினேஷ்குமார் உடனான பழக்கத்தை கைவிடுமாறு பல முறை கேட்டும் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டததால் கொன்றுவிட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார் கண்ணன். கண்டிக்கத்தானே சொன்னோம் கொலை செய்துவிட்டாரே மாமனார் என மனைவியை இழந்த கணவர் தற்போது தனிமையில் வாடுகிறார்.