கர்ப்பிணி மகள் வயிற்றில் குத்திக் கொன்ற கொடூர தந்தை! பதற வைக்கும் காரணம்!

மகாராஷ்டிரா மாநிலம் கட்கோபர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் 20 வயது மதிக்கத்தக்க இவரது மகள் மீனாட்சி பிரிஜேஷ் என்ற 26 வயது இளைஞனை காதலித்து வந்துள்ளார்.


இந்த காதல் விவகாரம் ராஜ்குமாருக்கு தெரிய வந்த நிலையில் சாதி வேறுபாடு காரணமாக திருமணத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார். இந்நிலையில் சென்ற பிப்ரவரி மாதம் பெற்றோரின் எதிர்ப்பை மீறி பிரிஜேஷை திருமணம் செய்து கொண்டு வேறொரு ஊரில் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியாமல் வசித்து வந்துள்ளார்.

இதையடுத்து தற்பொழுது மீனாட்சி கர்ப்பமாக பெற்றோரைக் காண வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் வந்துள்ளது. மேலும் தான் கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரிந்தால் அவர்கள் மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அவர் நினைத்துள்ளார். அதன்படி பெற்றோரைக் காண அவரது சொந்த ஊருக்கு மீனாட்சி புறப்பட, இத்தகவல் ராஜ்குமாருக்கு முன்னதாகவே தெரிந்து விட்டது.

மகள் மீண்டும் ஊருக்குள் வந்தால் தமக்கு அவமானம் ஏற்பட்டுவிடும் என்று நினைத்த ராஜ்குமார் மகளை ஊருக்குள் வரவிடாமல் வேறு இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.

தன்னை நம்பி வந்த மகளை கர்ப்பிணி என்றும் பாராமல் வயிற்றில் கத்தியால் குத்தி கொன்றார் ராஜ்குமார். இந்நிலையில் தகவலறிந்த காவல்துறையினர் மீனாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ராஜ்குமாரிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது முதலில் மகளை காணவில்லை என்றும்  அதன் பின் மகளை கொன்றது நான் தான் என்றும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து காவல்துறையினர் ராஜ்குமாரை கைது செய்துள்ளனர்.