அமெரிக்காவில் பஞ்சம் பிழைக்க வந்த குடும்பத்தினர் சர்வதேச பாலம் மூடபட்டதால் ஆற்றில் நீந்தி கடக்க முயற்சித்த போது தந்தையுடன் அவரது சட்டைக்குள் புதைந்த படி 2 வயது குழந்தை என இருவரது சடலமும் கரையொதுங்கிய சோகம்…
உலகை உலுக்கும் புகைப்படம்! அமெரிக்க கனவில் சென்ற தந்தை - மகளுக்கு நேர்ந்த விபரீதம்!

கடந்த வார இறுதியில் மெக்சிக்கோவை சேர்ந்த இளம் தம்பதியினர் பிழைப்பு தேடி அமெரிக்க நாட்டிற்கு தஞ்சம் புக வந்த போது துரதிஷ்டவசமாக அமெரிக்க சர்வதேச நுழைவு வழி அடுத்த சில நாட்களுக்கு மூடபட்டிருக்கும் என தெரிய வந்ததை அடுத்து 2 வயது கூட நிரம்பாத சிறு பெண் குழந்தையுடன் அந்த இளம் தம்பதியினர் ரியோ கிராண்டே ஆற்றை நீந்தி கடக்க முயற்சிக்கின்றனர்.
இதில் ஒரு சில மணி நேரம் மட்டுமே தாக்கு பிடிக்க முடிந்ததால், கணவரும் குழந்தையும் நீரில் மூச்சு முட்டி இறந்து போக மனைவி மெக்சிகோ நகரின் கரைக்கே திரும்பி விடுகிறார்.
சில தினங்களுக்கு முன்னதாக தந்தையின் சட்டைக்குள்ளாக புதைந்து அவரது கழுத்தை இறுக பற்றிய படி கரை ஒதுங்கிய இருவரது உடலும் பார்ப்பவர்கள் மனதை உலுக்குவதாக உள்ளது.இந்த நிலையில் இறந்தவர்கள் மெக்சிகோ, எல்சால்வடார் நாட்டைச் சேர்ந்த மார்ட்டினஸ் (வயது 25) எனவும் ( 2 வயது) சிறுமி வலேரியா எனவும் தெரிய வந்துள்ளது