தூக்க கலக்கத்தில் அசுர வேகம்! லாரி டிரைவரால் பரிதாபமாக பலியான தந்தை - மகள்! ஸ்ரீவில்லிபுத்தூர் சோகம்!

விருதுநகர் அருகே லாரி மற்றும் கார் கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே தந்தை மற்றும் மகள் இருவரும் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற தீயணைப்புத் துறை அதிகாரி மில்டன் ஜெயக்குமார், சேலத்திலிருந்து தனது மகள் ரெனி லாரோசை அழைத்துக்கொண்டு அம்பாசமுத்திரம் சென்றுகொண்டிருந்தார்.  

இந்நிலையில் இவர்களது கார் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சென்று கொண்டிருக்கையில், சாலையின் எதிர்ப்புறத்தில் இருந்து கட்டுக்கடங்காத வேகத்துடன் லாரி வந்துகொண்டிருந்தது. 

லாரியை ஓட்டி வந்த டிரைவர் தட்டுத்தடுமாறி எதிரே வந்த காரின் மீது மோதினார். கார், லாரி இரண்டும் நேருக்கு நேராக மோதிய இச்சம்பவத்தில் அதே இடத்திலேயே மில்டன் ஜெயகுமார் மற்றும் அவரது மகள் ரேனி இருவரும் உயிரிழந்தனர். 

லாரியை ஓட்டி வந்த டிரைவருக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து அங்கிருந்து லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.  

விசாரணையில், தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டி வந்ததால் கட்டுப்பாட்டை மீறி அதீத வேகத்தில் சென்று மோதியதாக தெரியவந்துள்ளது.