திகுதிகுவென எழுகிறது விவசாயப் புரட்சி… நீரோ மன்னரான மோடியின் மனம் மாறுமா..?

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவரும் நேரத்தில், கங்கைக் கரையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மோடியை நீரோ மன்னர் என்றுதான் வர்ணிக்கின்றனர்.


ஆறாவது நாளாகத் தொடரும் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு இன்று இன்னும் விவசாயிகள் வந்து சேர்ந்தவண்ணம் உள்ளனர். கடும் பனிப் பொழிவு,போலீசார் தரும் நெருக்கடிகள்,சாலைகளில் பள்ளம் தோண்டியும், கற்குவியல்களை வைத்தும் ஏற்படுத்தப்படும் தடைகள் ஆகியவற்றால்,தங்கள் பயணத்தை அரசு சாகசப் பயணமாக்கிவிட்டதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

ஒவ்வொரு இடத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகளை சரிப்படுத்தி,முன்னேறுவது சுவாராசியமான அனுபவமாக மாறிவிட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.. இந்த அரசாங்கம் விவசாயிகளுக்கு ஏதாவது செய்கிறேன் என்றால், அது நிச்சயம் எங்களுக்கல்ல, கார்ப்பரேட்டு கம்பெனிகளுக்கே என்பது என்கிறார்கள் விவசாயிகள்.

’’ஜனநாயக நாட்டில் எங்களுக்கு போராடும் உரிமை இல்லையா? அந்த உரிமையை பறிக்க அரசாங்கம் செய்யும் தந்திரங்கள் அவமானகரமனவை! எங்களை தடுக்க,தடுக்க முன்னேறுவோம்,அடிக்க,அடிக்க எழுந்து நிற்போம்.கொரானாவுக்கே அஞ்சாமல் தான் போராட வந்துள்ளோம்’’ என்றனர்!

பஞ்சாபின் 14 மாவட்டங்களில் இருந்து மேலும் பத்தாயிரம் பெண்கள் தனிப்படையாக டெல்லுக்கு புறப்பட்டு வர உள்ளோம் என பிந்து என்ற பெண்விவசாயி தெரிவித்தார்.

விவசாயிகள் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசின் கோரிக்கையை விவசாய குழுக்கள் நிராகரித்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இன்று மீண்டும் உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் ஆகிய மந்திரிகள் டெல்லியில் தற்போது அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

உடனே விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றி, போராட்டத்தை முடிச்சு வையுங்கப்பா.