மத்திய அரசுக்கு எதிராக கொதிக்கும் விவசாயிகள். நாட்டை உலுக்கிய போராட்டம்

மத்திய அரசு வேளாண்துறை சார்ந்த மூன்று சட்டங்களை நிறைவேற்றியது. இந்தச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் இந்திய விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் எவ்விதப் பாதுகாப்பும் இருக்காது. முழுக்க முழுக்க பன்னாட்டு நிறுவனங்களையும், உள்நாட்டுப் பெருநிறுவனங்களையும் சார்ந்து வாழ வேண்டிய அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது.


எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்களைப் பாதிக்கும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு செப்டம்பர் 25-ம் தேதி சாலை மறியல் மற்றும் சட்ட நகலெரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் 2வது நாளாக விவசாயிகளுக்கு குடும்பத்துடன் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அத்துடன், வேளாண் மசோதாகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது இன்று நாடு தழுவிய அளவில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு பாரதி கிசான் சங்கம் உள்பட மொத்தம் 31 விவசாய குழுக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மேலும், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிரோன்மணி அகாலி தளம், ஆம் ஆத்மி மற்றும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி உள்பட மொத்தம் 19 கட்சிகள் விவசாயிகளின் இன்று மேற்கொள்ளும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு அளித்துள்ளன.

இரண்டாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தது முதல், ஒவ்வொரு சட்டத்துக்கு எதிராகவும் மக்களை போராடத் தூண்டிக்கொண்டே இருக்கிறார். இந்த போராட்டங்களுக்கு எப்போது விடுதலை கிடைக்குமோ..?