தடை கற்களை படிக்கற்களாக்கி கலெக்டரான விவசாயி மகள் தர்மலா ஸ்ரீ! நெகிழும் உறவுகள்!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விவசாய குடும்ப மாணவி தர்மலா ஸ்ரீ ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழக அளவில் பத்தாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.


சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் ஆடை வடிவமைப்புத் துறையில் படிப்பை முடித்தவர் தர்மலா ஸ்ரீ. ஐ.ஏ.எஸ்.சை நோக்கி கவனம் திரும்ப தீவிரமாக உழைத்து பயிற்சிகளை மேற்கொண்டார். இந்நிலையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய  தேர்வில் அகில இந்திய அளவில் 409 வது இடத்தை பிடித்துள்ளார்.

அவருக்கு தமிழக அளவில் 10-ஆம் இடம் கிடைத்துள்ளது. சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி தர்மலா ஸ்ரீ, தனது வெற்றியின் காரணத்தை சோனா கல்லூரி மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

வருங்கால மாணவர்கள் எவ்வாறு திகழ வேண்டும் என்று ஊக்குவித்துப் பேசிய தர்மலா ஸ்ரீ யை கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா பாராட்டி கௌரவித்தார். விவசாய குடும்பத்தின் பின்னணியில் இருந்து விடா முயற்சியுடன் கலெக்டர் ஆக உள்ள தர்மலாவை பாராட்ட வார்த்தைகள் இல்லை.