கூப்டுறது அண்ணானு..! பழகுறது அத்தான்னு..! பிரபல டிவி தொகுப்பாளினியின் அந்தரங்கம் இது அந்தரங்கம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியின் அந்தரங்கம் அம்பலமாகி தற்போது சந்தி சிரிக்க ஆரம்பித்துள்ளதாம்.


இல்லங்கள் தோறும் வண்ணக் கோலம் படைத்து வரும் தொலைக்காட்சி இது. கள்ளக் காதல், விவாகரத்து என இந்த தொலைக்காட்சிக்கு இன்னொரு பெயரும் உண்டு. ஆமாம் தொலைக்காட்சியில் பணியாற்றும் தொகுப்பாளினி, தொகுப்பாளர்களுக்கு மேரேஜ் புரோக்கராகவும் இந்த டிவி செயல்படுவதாக பேசி சிரிப்பார்கள். 

இந்த தொலைக்காட்சியின் நியு ஜெனரேசன் தொகுப்பாளினி அவர். டிடி, பாவனா போன்றோர் சீனியர்கள் ஆகிவிட தற்போது இவர் தான் டிவியின் ஸ்டார் தொகுப்பாளினி. எந்த நிகழ்ச்சி என்றாலும் இவரும் இவர் அண்ணா என்று அழைக்கும் இன்னொருவரும் தான் ஹாட் கப்புள்ஸ். அண்மையில் தான் இந்த தொகுப்பாளினிக்கு திருமணம் வேறு நடந்தது. ஆனால் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனது கலைச்சேவையை அவர் தொடர்ந்து வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் சரி, நேரிலும் சரி அந்த ஆண் தொகுப்பாளரை இவர் அண்ணா என்று தான் அழைப்பார். எனவே இவர்கள் பாசமலர் ஜோடி என்று ரசிகர்கள் நினைப்பதுண்டு. ஆனால் இவர்கள் பலான ஜோடி என்று அந்த டிவி நிர்வாகத்திற்கும் அவருடன் பணியாற்றுபவர்களுக்கும் மட்டுமே தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் சென்னையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் சினிமா தொடர்பான விழா ஒன்று நடைபெற்றது. வழக்கம் போல் பாசமலர் ஜோடி போர்வையில் தொகுப்பாளினியும், தொகுப்பாளரும் அங்கு ஆஜர் ஆகியிருந்தனர். ஒரு கட்டத்தில் போதை உச்சத்திற்கு செல்ல அண்ணனை அத்தான் என்று அழைக்க ஆரம்பித்து ஜோடி எல்லை மீறியுள்ளது.

இதனை பார்த்து அதிர்ந்து போன இருவரின் நண்பர்களும் எதுவும் இங்கே வேண்டாம் உள்ளே போய் கொஞ்சுங்க என்று ஒரு ரூமை புக் செய்து கொடுத்துவிட்டு தலையில் அடித்துக் கொண்டு சென்றாராம்.