பிரபல டிவி நடிகையின் ஆபாச வீடியோ! காதலன் மீது திடுக் புகார்!

நெருங்கி பழகிய வீடியோ காட்சிகளை வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாக சென்னையில் துணை நடிகை போலீசில் புகார் அளித்துள்ளளார்.


டிவி, சினிமாவில் துணை நடிகையாக நடித்து வரும் ஜெனிபர் என்பவர் சென்னை வடபழனி காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.அதில் துணை நடிகரான பக்ரூதின் என்பவர் 3 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் ஆனதாகவும் ஆரம்பத்தில் நட்பாக இருந்த நாங்கள் பின்னர் காதலர்களாக மாறியதாக குறிப்பிட்டுள்ளார்.

மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த பக்ரூதின் என்னை காதலிப்பதாக கூறியதை ஏற்றுக் கொண்ட நான் அவரிடம் பல முறை நெருங்கி பழகிவந்தேன். நாங்கள் நெருங்கிப் பழகியதை எனக்கே தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார் ஜெனிபர். 

தற்போது தன்னிடம் அந்த வீடியோக்களை காட்டி பணம் கேட்டு மிரட்டுவதாக பக்ரூதின் மீது ஏற்கனவே 2 காவல் நிலையங்களில் புகார் அளித்த நிலையில் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். ஆனால் தற்போது மீண்டும் வீடியோக்களை வெளியிடுவதாக பக்ரூதின் மிரட்டுவதாக புகாரில் தெரிவித்துள்ளார் ஜெனிபர்.

மேலும் என்னுடைய வீட்டிற்கு வந்து என் தாய்க்கு கொலை மிரட்டல் தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் ஜெனிபர். ஜெனிபர் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை பக்ரூதின் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பக்ரூதின் போலீசாரிடம் தான் அதுபோல் மிரட்ட வில்லை எனவும், தன்னிடம் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் கேட்டதால் வேண்டுமென்றே தன் மீது அவதூறு புகார் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.