சமூகவலைதளங்களில் நூதனமுறையில் கொள்ளையடிக்கும் சம்பவம் எளிதாகிவிட்டது.
மயக்கும் குரல்! மயங்கிய பேஸ்புக் டோழிகள் லட்சம் லட்சமாக லவட்டிய பலே இளைஞர்கள்!
பேஸ்புக் மூலம் பல பெண்களுக்கு அறிமுகமாகி, ஒரு பெண் பேசுவது போல் பேசி அவர்களிடம் நூதன முறையில் ஒரு நபர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர் நவீன்குமார். இவர் கடந்த சில வருடங்களாகவே அப்பகுதியில் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு உள்ளதால் போலீசார் இவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, இவன் பெண்களிடம் நூதன முறையில் கொள்ளையடித்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.
இவர் பேஸ்புக்கில் பல பெண்களுக்கு நட்பு முறையில் அழைப்பு விடுத்துள்ளார். இதன் பின் இவரது அழைப்பை ஏற்ற பெண்களிடம் தான் ஒரு பெண் எனவும் தனக்கு மாந்திரீகம் தெரியும் எனவும் கூறி அவர்களை பண ஆசை காட்டி தனது வலையில் வீழ்த்தி உள்ளார். அதன் பிறகு அவர்களிடம் சில நாட்கள் நன்றாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களிடம் உங்களிடம் உள்ள நகைகளை நான் சொல்லும் கோவிலில் வைத்து வழிபட்டால் மேலும் செல்வம் கொழிக்கும் எனவும் கூறியுள்ளார்.
இதனால் அந்த பெண்களும் அவர் சொன்னதை நம்பி நகைகளை வைத்து கோவிலை ஒரு முறை சுற்றி வரும் போது அவர்கள் வருவதற்குள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் நகைகளை இவர் எடுத்துக் கொண்டு ஓடிவிடுவார்.
நவீன்குமார் தனது நண்பர் ராஜ்குமாருடன் சேர்ந்தே இந்த நூதன நகை மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதனால் இருவரையும் கைது செய்த பொலிசார் அவர்களிடமிருந்து, 3 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் மற்றும் 61 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர்களிடம் ஏமாந்த பெண்கள் எத்தனை பேர் எனவும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.