பேஸ்புக் நட்பை ஏற்ற கல்லூரி மாணவி! 2 பேரிடம் கற்பை பறிகொடுத்த பரிதாபம்!

நாகர்கோவில் பகுதியில் தனது காதலியை காரில் அழைத்துச் சென்று தனது நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.


நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது காதலனின் ஆசை வார்த்தையை நம்பி தனது கற்பை இழந்து உள்ளார். அந்தப் பெண் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அப்போது கல்லூரி மாணவர்கள் என்றாலே அனைவரும் சமூக வலைதளங்களில் பொழுதைக் கழிப்பது எளிதாகிவிட்டது .

அதேபோல் ஒரு நாள் தனது பேஸ்புக் பக்கத்தில் ஏசுநேசன் என்பவரிடம் இருந்து நட்பிற்கான அழைப்பு வந்துள்ளது. அதை மாணவி ஏற்றுள்ளார் . பிறகு இருவரும் நண்பர்களாக தங்களது உரையாடலை தொடங்கினர் .இதையடுத்து அந்தப் பெண்ணுக்கும் ஏசுநேசன் என்ற வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

கை ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான அந்த வாலிபர் முதலில்  மாணவியிடம் நட்பு முறையில் கருத்துக்களை பரிமாறி வந்தார். பிறகு நாட்கள் செல்லச் செல்ல அந்த மாணவியை தான் காதலிப்பதாக கூறினார். அதன் பிறகு இவர் ஊனமுற்றோர் என்பதால் முதலில் மாணவி அவரது காதலை ஏற்க தயங்கியுள்ளார். பின்னர் அதை தொடர்ந்து அந்த வாலிபரின் தொடர் வற்புறுத்தல் காரணமாக அவரது காதலை ஏற்றுக் கொண்டார்.

சில நாட்கள் செல்ல செல்ல  அந்த வாலிபர் மாணவியிடம் அவரை நேரில் சந்தித்து பேச விரும்புவதாக கூறினார். அந்த மாணவியும் அதற்கு சம்மதம் தெரிவித்ததால் ஏசுநேசன் தனது காரில் வெள்ளமடம் பகுதிக்கு வந்தார். பின்னர் அங்கு வந்த மாணவி  அவரை தனது காரில் ஏற்றிக் கொண்டு ஆவரைகுளம் நோக்கி புறப்பட்டார்.அந்த காரில் ஏசுநேசனுடன் வாலிபர் ஒருவரும் இருந்ததால் சந்தேகம் அடைந்த மாணவி அந்த வாலிபர் பற்றி ஏசுநேசனிடம் கேட்டார். அதற்கு அவர் தனது நண்பர் ஆதிஸ் என்றும் தனக்கு துணையாக வந்துள்ளதாகவும் கூறி மாணவியை சமாதானப்படுத்தினார்.

இதையடுத்து இளைப்பாறுவதற்காக ஒரு விடுதிக்கு சென்றனர்.அங்கு வைத்து அந்தப் பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அந்த மாணவியை ஏசுநேசன் கற்பழித்தார். மேலும் தனது நண்பர் ஆதிசுக்கும் அந்த மாணவியை விருந்தாக்கினார். தனது காரில் அந்த மாணவியை ஏற்றிக் கொண்டு மீண்டும் அவரது ஊரில் கொண்டு சென்று விட்டுவிட்டு ஏசுநேசன் சென்றுவிட்டார்.

பாதிக்கப்பட்ட அந்த மாணவி நடந்த விவரங்களை தனது பெற்றோர்களிடம் கூறி அழுதார். பிறகு தனக்கு நடந்த கொடுமை பற்றி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு ஏசுநேசன் மற்றும் அவரது நண்பர் ஆதீஸ் ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.