இனி யூட்யூபில் புகுந்து கலக்க இருப்பதாக வனிதா விஜயகுமார் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
என்ன வச்சி எல்லாரும் சம்பாதிக்குறாங்க! அதான் நானும்! பிக்பாஸ் வனிதா எடுத்த புது முடிவு!
தமிழில் தளபதி விஜயுடன் அறிமுகமாகி சில படங்களில் நடித்த பிறகு திருமணமாகி செட்டில் ஆனவர் வனிதா விஜயகுமார். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இரண்டு கணவர்களுடன் விவாகரத்து ஆன பிறகு தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்த இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அதில் பல சர்ச்சைகளை சந்தித்த பிறகு போட்டியில் இருந்து வெளியேறிய வனிதா மீண்டும் திரைத் துறைக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். தற்போது ஒரு படத்திலும், அதே தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்று வருகிறார்.
இதற்கிடையில் யூடியூப் இணையதளத்தில் சேனல் ஒன்றை துவங்கி தன் மனதிலிருக்கும் கருத்துக்களை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்க இருப்பதாக ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கி வருகிறார் என்ற தகவலை தெரிவித்தார்.