19 வயது காதல் மனைவியின் தலையை துண்டாக வெட்டி பைக்கில் எடுத்துச் சென்ற கணவன்! பதற வைக்கும் காரணம்!

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியின் தலையை கணவனே துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பெருந்துறையை சேர்ந்தவர் முனியப்பன் (28 வயது). சிலிண்டர் டெலிவரி வேலை செய்து வருகிறார். இவர், சில மாதங்கள் முன்பாக, நிவேதா என்ற 19 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், வழக்கம்போல, வேலை முடிந்து முனியப்பன் வீட்டுக்கு வந்தபோது, நிவேதா வேறொரு இளைஞருடன் செக்ஸ் உறவு செய்துகொண்டிருந்துள்ளார். இதைப் பார்த்ததும், முனியப்பன் அதிர்ச்சி அடைந்தார். 

இதுதொடர்பாக, இருவருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், எரிச்சலான முனியப்பன், மாமியார் வீட்டில், நிவேதாவை கொண்டுவிடுவதாகக் கூறியுள்ளார். இதன்பேரில், நிவேதாவும், முனியப்பனும் பைக்கில் சென்றுள்ளனர். பாதி வழியில் மறுபடியும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த முனியப்பன், ஒளித்து வைத்திருந்த கத்தியால் நிவேதாவின் தலையை கரகரவென அறுத்து, கொலை செய்தார். அந்த தலையை தனியாகவும், நிவேதாவின் முண்டத்தை தனியாகவும் பைக்கில் வைத்துக் கொண்டு, தனது வீடு இருந்த தெருவில் வேகமாக பைக்கை நீண்ட நேரம் ஓட்டியுள்ளார். ஒருகட்டத்தில், அங்கிருந்த வீட்டின் மீது பைக் மோதி அவர் கீழே விழுந்தார். அப்போது, தலை, முண்டம் உருண்டோடியதை பார்த்து, பொதுமக்கள் அதிர்ந்து போய், போலீசில் தகவல் அளித்தனர். இதையடுத்து, போலீசார், முனியப்பனை கைது செய்தனர்.