நேர்மையான, நியாயமான கூட்டணியாக இருந்தால் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் இயல்பாக இருக்கும். ஆனால், இப்போது ஒவ்வொரு கட்சியும் சந்தர்ப்பவாத கூட்டணியே வைத்துள்ளன. அதனால் ஆளாளுக்கு வாய்க்கு வருவதை எல்லாம் பேசுகிறார்கள்.
கற்பழிப்பு எத்தனை நடந்தாலும் எங்களுக்கே ஓட்டு போடுங்க! உலறிக் கொட்டும் பிரேமலதா! பீதியில் அதிமுக!
ஆப்பிளுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று வாக்கு கேட்கிறார் நமது திண்டுக்கல் சீனிவாசன். பழனிசாமியின் ஆட்சி எடப்பாடியின் கையில் இருக்கிறது என்று புலம்புகிறார் ஸ்டாலின். இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடுவது போன்று தேர்தல் வாக்கு சேகரித்துள்ளார் பிரேமலதா. இப்போது தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகம் நடந்துவருகிறது.
அதுவும் அ.தி.மு.க. கட்சியில், ஆட்சியில் இருக்கும்போதுதான் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. புள்ளிகள் மீதுதான் குற்றம் சாட்டப்படுகிறது.’இதையெல்லாம் மறந்துவிட்டு, ‘பாலியல் வன்கொடுமை எத்தனை நடந்தாலும் என்று பேச ஆரம்பித்து.
அதன்பிறகு சுதாரித்துக்கொண்ட பிரேமலதா. எங்களுக்கே ஓட்டுப் போடுங்கள் என்று கேட்டுகொண்டுள்ளார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த அ.தி.மு.க.வினரும் பா.ம.க.வினரும் அலறியோடாத குறைதான். உங்க வாயை வச்சிக்கிட்டு சும்மா இருந்தா போதும், தொகுதிக்கு வரவே வேண்டாம் என்று கெஞ்சுகிறார்கள்.
இப்படித்தான் விஜயபிரபாகரன் வரவேண்டாம் என்று நிறுத்தி வைத்திருக்கிறார்கள், இப்போது அம்மாவுக்கும் சிக்கலா