பைல்ஸ் சிகிச்சைக்கு சென்ற பெண்! தப்பு தப்பாக பேசிய டாக்டர்! ராங் டச் வேறு! பெண் என்ஜினியருக்கு நேர்ந்த விபரீதம்!

மும்பை: ''என்ன ஜாதி என்று கேட்டுவிட்டு, என்னை பாலியல் சீண்டல் செய்தார்,'' என்று டாக்டர் மீது பெண் பொறியாளர் புகார் அளித்துள்ளார்.


மும்பை காடக் போலீஸ் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் கிளினிக் நடத்தி வருபவர் டாக்டர் அமித் காந்தி. 40 வயதாகும் இவரது கிளினிக்கில் சிகிச்சை பெறுவதற்காக, 23 வயதாகும் இளம்பெண் ஒருவர் வந்துள்ளார். அந்த பெண் பொறியாளராகப் பணிபுரிகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கும் முன்பாக, ''என்ன ஜாதி, எப்படி உனக்கு பைல்ஸ் வந்தது,

அந்த பகுதியை கொஞ்சம் காட்டு,'' என்றெல்லாம் சங்கடமாகப் பேசியதாகவும்  திடீரென மற்ற நோயாளிகள் முன்னிலையில் தனது மார்பகத்தை பிடித்தார் எனவும், அந்த பெண் புகார் எழுப்பியுள்ளார். 

தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதால் தைரியமாக தனது மார்பகத்தை பிடித்த டாக்டர், மற்ற நோயாளிகள் முன்னிலையில் இப்படி அருவருப்பாக கேள்விகள் கேட்டது தனக்கு மன உளைச்சலாக உள்ளது என்றும் அந்த பெண், தனது புகார் கூறியுள்ளார். 

இதன்பேரில் வழக்குப் பதிந்த காடக் பகுதி போலீசார், அந்த டாக்டரை கைது செய்துள்ளனர். அதேசமயம், டாக்டரின் மனைவி இந்த புகாரை மறுத்துள்ளார். ''எல்லா நோயாளிகளையும் செக்அப் செய்வதும், அவர்களின் நோய் பாதிப்பை பார்வையிடுவதும்தான் டாக்டரின் வேலை. நோயாளியாக வருபவர் தனது அந்தரங்கம் பற்றியெல்லாம் கவலைப்படுவது தவறானது.

அந்தரங்கம் என எதுவும் இல்லை. நோய்க்கு சிகிச்சை பெறும்போது, அந்தரங்கம் பற்றி யோசித்தால், டாக்டர் தொழிலையே நாங்கள் செய்ய முடியாது. குறிப்பிட்ட பெண்ணை எனது கணவர் பரிசோதித்துப் பார்க்க முயன்றார். ஆனால், அந்த பெண் உடனே தன்னை ஜாதி காரணமாக பாலியல் சீண்டல் செய்துவிட்டார் என்று புகார் அளித்துள்ளார்.

நாங்கள் எந்த நோயாளியிடமும்  ஜாதி என்ன என்று கேட்பதே இல்லை. அந்த பெண்ணின் பொய் புகாரை கேட்டு போலீசாரும் என் கணவரை கைது செய்திருப்பது வேதனையாக உள்ளது,'' என்றார்.