காரை வழிமறித்து ஏறி அதன் மீது உட்கார்ந்த காட்டு யானை..! உள்ளே இருந்தவர்களின் திக் திக் அனுபவம்! நெஞ்சை பதறச் செய்யும் சம்பவம்!

மனிதர்களைப் போலவே நாமும் காரில் செல்லலாம் என யானை ஒன்று முயற்சித்த ருசிகர சம்பவம் தாய்லாந்தில் நடைபெற்றுள்ளது.


பொதுவாகவே வனப்பகுதிகளில் வாகனங்கள் செல்லும்போது விலங்கினங்கள் குறுக்கிடுவதும், அச்சுறுத்துவதும், அதில் இருந்து பொதுமக்கள் தப்பிப்பதும் போன்ற காட்சிகளை அடிக்கடி பார்த்திருக்கிறோம். நாம் செல்லும் பாதையில் விலங்குகள் குறுக்கிடுவதாக நினைத்தால் அது தவறு. விலங்கினங்கள் வாழும் இடத்தை நாம்தான் ஆக்கிரமித்து அவற்றிற்கு இடையூறாக உள்ளோம். 

தமிழகத்திலும் வாகனங்கள் செல்லும்போது புலி, சிறுத்தை, யானை போன்ற வனவிலங்குகள் திடீரென சாலையின் நடுவில் நின்றுகொண்டு அச்சுறுத்தும். அது வீடியோ எடுக்கப்பட்டு வைரலாகும். அதுபோல் ஒரு சம்பவம்தான் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடைபெற்றுள்ளது.

தாய்லாந்து தேசிய பூங்காவில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றை வழிமறித்த யானை அதன் மேல் அமர்ந்து கொண்டது. இதனால் காரில் பயணம் செய்தவர்கள் அச்சம் அடைந்தன. ஒரு அடிகூட கார் நகர முடியாத அளவுக்கு அந்த யானை சப்பணமிட்டு அமர்ந்து கொண்டது. முதலில் யானை தும்பிக்கையால் காரின் முன்பக்கத்தை தட்டியது. அப்படியே தனது இரண்டு முன்கால்களை எடுத்து காரை மிதித்து. பின்னர் தனது இரண்டு முன்கால்களையும் அப்படியே காரின் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு யானை கொண்டுசென்றது. பின்னர் காரை அப்படியே அமுக்க முயன்றது.

யானை ஒரு நொடி கவனக்குறைவாக இருந்த நேரத்தில் உடனடியாக ஓட்டுநர் அங்கிருந்து காரை எடுத்து வேகமாக ஓட்டி தப்பித்தார். இல்லாவிட்டால் யானையிடம் சிக்கி காரோடு சேர்த்து காரில் உள்ளவர்கள் ஆபத்தில் சிக்கியிருக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும். இதை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.