தூத்துக்குடியிலயும் தேர்தல ரத்து செஞ்சிடுவாங்க! பதறும் கனிமொழி!

தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பிய தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்


தூத்துக்குடியில் எப்படியாவது தேர்தலை நிறுத்திவிடவேண்டும் என்ற பாஜக, அதிமுக-வின் ஆசை நிச்சயம் நிறைவேறாது என்றார், வருமாணவரித்துறை, சிபிஐ போன்ற துறைகளை பாஜக தன்வசப்படுத்திகொண்டு நாடுமுழுவதும் பாஜக-விற்கு எதிர் அணியில் இருப்பவர்கள் மீது வருமாண வரிச்சோதனை நடத்தியிருக்கிறார்கள் என குற்றம் சாட்டினார்,  தொடர்ந்து பேசிய கனிமொழி தன் மீது சோதனை நடத்தப்பட்ட போது உரிய ஆவனங்கள் எதுவும் இன்றி அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிவித்தார் யார் புகார் அளித்து சோதனைக்கு வந்தீர்கள் என கேட்டபோது வேட்பாளர் வேட்பாளர் என இருமுறை குறிபிட்டதாகவும் அவர் தெரிவித்தார். தன்னிடம் இருந்து எந்த பனத்தையும் கைபற்றவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தோல்வி பயத்தால் பாஜக இதுபோன்று செயல்படுவதாக குற்றம் சாட்டிய கனிமொழி எதிக் கட்சிகளை பாஜக அச்சுறுத்திவருவதாக தெரித்தார்  ஆளும் கட்சிகள் மீது புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். தமிழகம் முழுவதும் அதிமுக, பாஜக -மீது மக்கள் கடும் போபத்தில் இருப்பதாக குறிபிட்ட கனிமொழி அவர்கள் செய்த துரோகத்தை  மக்கள் மறக்கமாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.

தமிழிசை செளந்தர்ராஜன் என்ன செய்தாலும் தனிபட்ட முறையில் அவரை நான் விமர்சிக்கமாட்டேன் எனவும் கனிமொழி குறிப்பிட்டார்  வாக்காளர்கள் தமிழகத்தையும், நாட்டையும் காபாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்