ஸ்டாலின் பிரச்சார வேனில் சோதனை! தூத்துக்குடியில் தெறிக்க விட்ட பறக்கும் படை!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத் தேர்தலில் சண்முகையாவை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக திமுக தலைவர் மு. க .ஸ்டாலின் இன்று விமானம் மூலமாக தூத்துக்குடி வந்தடைந்தார்..


தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் உள்ள (சத்யா ரிசார்ட்) தனியார் விடுதியில்  திமுக தலைவர் ஸ்டாலின் தங்குவதற்கான முன் ஏற்பாடுகள் எப்போதும் போல  செய்யபட்டுள்ள நிலையில் 

ஏற்கனவே அங்கு தங்கியிருக்கும்   அரசியல் கட்சியினர் வாகனங்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் வாகனங்காளில் தீவிர சோதனைகள் நடத்தபட்டு வருகிறது

இடை தேர்தலையொட்டி பண பட்டுவாடா செய்வதாக புகார் வந்ததை அடுத்து  தேர்தல் பறக்கும் படையினர் அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம்.பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  வருகிறது....

இதேபோன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஒட்டபிடாரத்தில் செய்ய இருந்த தேர்தல் பிரச்சாரம் ரத்து எனவும் தகவல் வெளியாகியுள்ளது மேலும் கடந்த ஞாயிறு அன்று கமல்ஹாசன் கோட்சே குறித்த விமர்சனம் நாடு முழுவதும் இந்து அமைப்பு தலைவர்கள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இன்று அவரது பிரச்சாரம் ரத்து செய்யபட்டுள்ளது குறிப்பிடதக்கது..