அ.தி.மு.க. வெற்றிக்கு களம் இறங்குகிறது பெண்கள் படை..! எடப்பாடியாரின் பலே யோசனை

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நிலையில் அதிமுக தலைவர்கள ஆலோசனை நடத்தப்பட்டது. கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடந்தது.


 இந்த கூட்டத்தில் மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர், தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், சட்டமன்ற பொதுத்தேர்தல் சம்பந்தமாக என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்தும், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எவ்வளவு சீட் வழங்க வேண்டும் என்பது குறித்தும், பாஜ கேட்டுள்ள தொகுதி விவகாரம் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

மேலும், பூத் கமிட்டியில் அதிக அளவில் பெண்களுக்கு இடம் அளிக்க வகை செய்வது குறித்து பட்டியலில் திருத்தம் செய்ய கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு பூத்திலும் 75 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அந்த கமிட்டியில் பெண்கள் 25 பேர் இருக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பெண்களால் மட்டுமே, வீடு வரையில் சென்று வாக்காளர்களை கொண்டுவர முடியும் என்பதால், இப்படி திட்டம் போட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த விஷயம் நிர்வாகிகளுக்கு பெரும் சந்தோஷம் கொடுத்துள்ளது.