1973ல் லேடிஸ் ஹாஸ்டலில் கரன்டை கட் செய்துவிட்டு என்ன செஞ்சீங்க? ஸ்டாலினை வம்பு இழுக்கும் எடப்பாடி!

எடப்பாடி ஊழல் செய்கிறார், மோடிக்கு அடிமையாக இருக்கிறார் என்று ஸ்டாலின் தனிநபர் விமர்சனத்தில் இறங்கினார். அதேபோன்று பொள்ளாச்சி சம்பவம் குறித்து , இப்போது எடப்பாடி திடீர் அதிர்வெடி ஒன்றை கிளப்பியிருக்கிறார்.


அதாவது 1972 களில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இரவு மின்சாரத்தை தடை செய்துவிட்டு, நடந்தது என்னவென்று ஸ்டாலினுக்கும் மக்களுக்கும் தெரியும் என்று சொல்லியிருக்கிறார்.அன்று என்ன நடந்தது என்று விசாரித்தோம்.

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி பெண்கள் அருகிலிருந்த உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலிலுக்கு வந்தபோது, அப்போது பிளே பாய் போன்று திரிந்த ஸ்டாலின் கும்பலுடன் சிறு மோதல் வெடித்திருக்கிறது. அந்தப் பெண்களில் ஒருவர் காவல் துறை உயர் அதிகாரியின் மகள் என்பதால் பிரச்னை தொடர்ந்து பெரிதாகிக்கொண்டே இருந்திருக்கிறது.

இதையடுத்து அந்தக் கல்லூரியில் ஹாஸ்டல் டே நடத்தப்பட்ட போது மின்சாரத்தை அணைத்துவிட்டு, கல்லூரிக்குள் நுழைந்து அந்தப் பெண்ணை தூக்கினார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தில் இருந்த காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் மிசா காலத்தில், ஸ்டாலினை மட்டும் தூக்கிப் போய் சாத்து சாத்து என்று சாத்தினார்களாம்.

பொள்ளாச்சி விவகாரத்தை நீ பேசினால் நான் ஸ்டெல்லா மேரீஸ் என்று இறங்கியிருக்கிறார் எடப்பாடி. இன்னும் என்னென்ன விவகாரமெல்லாம் தேர்தலுக்குள் வரப்போகுதோ..?