ஸ்டாலினைத் தேடி வந்த எடப்பாடி பழனிசாமி! அசந்து நின்ற தி.மு.க.!

அடுத்து அமையப்போவது தி.மு.க. ஆட்சிதான் என்று பலரும் முடிவு செய்துவிட்டதால், தி.மு.க.வைத் தேடிவரும் கட்சியினரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.


அந்த வகையில், இன்று ஸ்டாலினைத் தேடிவந்த நபரைப் பார்த்து ஒட்டுமொத்த தி.மு.க.வும் அதிர்ச்சி அடைந்துவிட்டது. ஆம், அப்படியே எடப்பாடி பழனிசாமியின் சாயலில் ஒருவர் நடந்துவந்தார்.

அவரை உற்றுப் பார்த்த பிறகுதான் அவர் எடப்பாடியின் சகோதரர் விஸ்வநாதன் என்பது உறுதியானது. சகோதரர் என்றால் உடன் பிறந்தவர் அல்ல, எடப்பாடியாரின் பெரியம்மா மகன். சேலம் மாவட்டம் நடுங்குலம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர்.

விஸ்வநாதனின் மகன்கள் ரஞ்சித், கார்த்தி ஆகியோரும் இன்று தி.மு.க.வில் இணைந்தனர். மக்கள் நலப் பணிகளை அ.தி.மு..க. அசட்டை செய்வதாகவும், மக்கள் நன்மைக்காகவே சரியான கட்சியில் வந்து இணைந்திருக்கிறேன் என்று அறிவித்து இருக்கிறார் விஸ்வநாதன்.

முதல்வரின் சகோதரராக இருந்துகொண்டு எதிர்முகாமில் இணையலாமா என்று கேட்கப்பட்டது. அப்போது மக்கள் நலன் மட்டுமே முக்கியம் என்று கூறினார். உண்மையில், எடப்பாடிக்கும் அவருக்கும் நடந்த மோதல் காரணமாகவே கோபித்துக்கொண்டு தி.மு.க.வில் சேர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. எந்த நேரத்திலும் மீண்டும் அவர் அ.தி.மு.க.வுக்கு போகக்கூடும் என்கிறார்கள்.