கே.பி.முனுசாமி இதுக்குத்தான் கூவுகிறாரா..? கடுப்பில் எடப்பாடி பழனிசாமி

சம்பந்தமே இல்லாமல் சமீபத்தில் கே.பி.முனுசாமி சீரியஸாக சசிகலாவைத் தாக்கிப் பேசினார். அதாவது, சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படியே வந்தாலும் அ.தி.மு.க.வில் அவருக்கு இடம் இல்லை என்று ஓங்கி அடித்தார்.


சசிகலாவின் வருகை பற்றி யாரும் பேச வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி தடை போட்டிருக்கும் நிலையில், எதற்காக கே.பி.முனுசாம் இப்படி ஓங்கி குரல் கொடுத்தார் என்று கேள்வி கேட்டால், வித்தியாசமான பதில் வருகிறது. 

ஆம், ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு யாரைப் போடலாம் என்று அ.தி.மு.க.வில் குடுமிப்பிடி சண்டையே நடந்துவருகிறது. அதில் ஓ.பன்னீர்செல்வம் கோட்டாவில் எப்படியும் சீட் வாங்கிவிட வேண்டும் என்பதற்காகத்தான் எடப்பாடியை ஐஸ் வைக்கும் விதமாக சசிகலாவை தாக்கிப் பேசினாராம்.

இந்த பேச்சு எடப்பாடியை மேலும் சூடாக்கிவிட்டதாம். தினகரன் மீதுதான் அ.தி.மு.க. அரசுக்குக் கோபம், சசிகலா மீது அரசு பாசமாகத்தான் இருக்கிறது என்று ஒரு இமேஜ் இருந்துவரும் நிலையில், அதை உடைத்துவிட்டாரே என்று டென்ஷனில் இருக்கிறாராம் எடப்பாடி.

கஷ்டப்பட்டு கூவியிருக்கார், ஏதாவது போட்டுக் கொடுங்கப்பா.