தீவுத்திடலுக்கு சாப்பிட வாங்க! அழைக்கிறார் விவசாயி எடப்பாடி பழனிசாமி!

சென்னை தீவுத்திடலில் மதராசபட்டினம் விருந்து என்ற உணவு மற்றும் கலாச்சார திருவிழா இன்று தொடங்கி மூன்று நாள்கள் நடக்கிறது. இந்த திருவிழாவை முதல்வர் பழனிச்சாமி . துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

தமிழக அரசின் உள்ளாட்சிதுறை, சத்துணவுத்துறை, சுகாதாரத்துறை உள்பட பல்வேறு துறைகள் இணைந்து இந்த மதராசபட்டினம் விருந்து உணவு திருவிழாவை நடத்துகிறது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பாரம்பரிய உணவு திருவிழா நடத்தப்படுகிறது.

வெளிநாட்டு குளிர்பானங்களை மக்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும். அனைவரும் அதிக சக்தியுள்ள இளநீர், மோர், பழச்சாறு அருந்ந வேண்டும். மக்களுக்கு தரமான உணவு கிடைக்க வைப்பது அரசின் கடமை என்பதற்காக இந்த விழா நடத்தப்படுகிறதாம். சென்னை தீவுத்திடலில் இன்று காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை உணவு திருவிழா வரும் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. 

பசி எடுத்த பிறகே சாப்பிட வேண்டும். இதை நாம் கடைபிடித்தால் நோய்கள் அண்டாது. இப்பொழுது எல்லாம் இளம் வயதிலேயே மக்களுக்கு ரத்த அழுத்தம் நீரிழிவு நோய், இதய சம்பந்தப்பட்ட நோய் ஆகியவற்றுக்கு உணவு பழக்க வழக்கம் காரணம் என்பதை கூறுவதற்கே இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

நம் முன்னோர்களின் உணவான சாமை, கேழ்வரகு, திணை, குதிரைவாலி, கம்பு, சோளம், போன்ற இதர நவதானியங்களை அன்றாடம் பயன்படுத்தினாலும் அதற்கு ஏற்ற உடல் உழைப்பை கொண்டு வாழ்ந்ததினால் தான் அன்றைக்கு அவர்களுக்கு ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு நோய் ஆகியவை அரிதாக காணப்பட்டது.

நம் அன்றாட வாழ்வில் பாரம்பரிய உணவை சேர்ப்பதுடன் உடல் பயிற்சியையும் மேற்கொண்டு நாம் ஆரோக்கியமாக வாழவேண்டும். உடல்பயிற்சி எவ்வளவு முக்கியமானதோ அதேபோல் யோகா பயிற்சி அவசியம்.அது மனதுக்கு புத்துணர்வு அளிக்கும். யார் ஒருவருக்கு நோய் இல்லையோ அவர்கள் மிகுந்த செல்வந்தர் என்று எடப்பாடி பேசினார்.

விவசாயி அல்லவா, அப்படித்தான் பேசுவார். எப்படியோ தமிழக அரசு ஒரு புதுமை முயற்சியாக இதனை முன்னெடுத்துள்ளது, போய்த்தான் பாருங்களேன். தமிழக அரசின் உள்ளாட்சிதுறை, சத்துணவுத்துறை, சுகாதாரத்துறை உள்பட பல்வேறு துறைகள் இணைந்து இந்த மதராசபட்டினம் விருந்து உணவு திருவிழாவை நடத்துகிறது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பாரம்பரிய உணவு திருவிழா நடத்தப்படுகிறது.

வெளிநாட்டு குளிர்பானங்களை மக்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும். அனைவரும் அதிக சக்தியுள்ள இளநீர், மோர், பழச்சாறு அருந்ந வேண்டும். மக்களுக்கு தரமான உணவு கிடைக்க வைப்பது அரசின் கடமை என்பதற்காக இந்த விழா நடத்தப்படுகிறதாம். சென்னை தீவுத்திடலில் இன்று காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை உணவு திருவிழா வரும் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. 

பசி எடுத்த பிறகே சாப்பிட வேண்டும். இதை நாம் கடைபிடித்தால் நோய்கள் அண்டாது. இப்பொழுது எல்லாம் இளம் வயதிலேயே மக்களுக்கு ரத்த அழுத்தம் நீரிழிவு நோய், இதய சம்பந்தப்பட்ட நோய் ஆகியவற்றுக்கு உணவு பழக்க வழக்கம் காரணம் என்பதை கூறுவதற்கே இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

நம் முன்னோர்களின் உணவான சாமை, கேழ்வரகு, திணை, குதிரைவாலி, கம்பு, சோளம், போன்ற இதர நவதானியங்களை அன்றாடம் பயன்படுத்தினாலும் அதற்கு ஏற்ற உடல் உழைப்பை கொண்டு வாழ்ந்ததினால் தான் அன்றைக்கு அவர்களுக்கு ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு நோய் ஆகியவை அரிதாக காணப்பட்டது. நம் அன்றாட வாழ்வில் பாரம்பரிய உணவை சேர்ப்பதுடன் உடல் பயிற்சியையும் மேற்கொண்டு நாம் ஆரோக்கியமாக வாழவேண்டும். உடல்பயிற்சி எவ்வளவு முக்கியமானதோ அதேபோல் யோகா பயிற்சி அவசியம்.அது மனதுக்கு புத்துணர்வு அளிக்கும். யார் ஒருவருக்கு நோய் இல்லையோ அவர்கள் மிகுந்த செல்வந்தர் என்று எடப்பாடி பேசினார்.

விவசாயி அல்லவா, அப்படித்தான் பேசுவார். எப்படியோ தமிழக அரசு ஒரு புதுமை முயற்சியாக இதனை முன்னெடுத்துள்ளது, போய்த்தான் பாருங்களேன்.