எம்.ஜி.ஆர். அபிமானிகளை மறந்துவிட்ட எடப்பாடி.! ஆண்டு விழாவில் அக்கப்போர்!

இன்று, அனைத்திந்திய அண்ணா திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்தின் 48ம் ஆண்டு துவ‌ங்கப்பட்ட நாள் இன்று.


த‌மிழ‌க‌த்தில் அதிகபட்சமாக 29 ஆண்டுக‌ள் ஆட்சி செய்யும் ஒரே இய‌க்க‌ம் அண்ணா தி.மு.க. மட்டும்தான். இதுவ‌ரை காங்கிர‌ஸ் 20 ஆண்டுக‌ளும், தி.மு.க. 19 ஆண்டுக‌ளும் ஆட்சி செய்துள்ள‌ன. இந்தக் கட்சி அடுத்து மீண்டும் ஆட்சிக்கு வருமா என்பதுதான் கேள்வி.

ஏனென்றால் கட்சி ஆண்டுவிழாவை பெயருக்குத்தான் கொண்டாடினார்களே தவிர, கட்சி தொடங்கிய நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு உதவியாக நின்றவர்கள், அன்றைய கழகத் தொண்டர்கள், கழக கண்மணிகள் ஆகிய யாரையும் எடப்பாடி அரசு கௌரவிக்கவே இல்லை என்று எம்.ஜி.ஆர். ரசிகர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.

ஜெயலலிதா இருந்த வரையிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தக் காலத்து கட்சியினருக்கு மரியாதை செய்வதும், ஒவ்வொரு ஊரிலும் மீட்டிங், ஊர்வலம், கலை நிகழ்ச்சி என்று ஆண்டுவிழா களை கட்டும். ஆனால், இந்த ஆண்டு எதுவும் இல்லாமல் சாக்லேட்டுடன் முடிந்துவிட்டது என்று எம்.ஜி.ஆர். ரசிகர்கள் வருந்துகிறார்கள்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகே அ.தி.மு.க.வுக்கு சோதனை தொடங்கிவிட்டது. சசியின் ஆதரவளர்கள் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தினகரனுடன் இணைந்தார்கள். அதனால் கட்சி சின்னாபின்னமாகி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அநியாயமாகத் தோற்றுப் போனது.

இப்போது எடப்பாடி, பன்னீர் என்று இரட்டைத் தலைமை இருக்கிறது. இது அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரையிலும் தாக்கு பிடிக்குமா அல்லது மீண்டும் சிதறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.