வரலாற்றில் இடம் பிடிக்கப்போகும் எடப்பாடி மாவட்டம்..! இனிய உதயம்!

மாவட்டங்களைப் பிரிப்பது என்பது மிகப்பெரிய விஷயமாக கடந்த காலங்களில் இருந்துவந்தது.


சிசேரியன் போன்று கடகடவென பல மாவட்டங்களை உருவாக்கியிருக்கிறார் எடப்படி பழனிசாமி. கடந்த ஆண்டு தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. அடுத்து தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்த்து தற்போது 37 மாவட்டங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. 

இப்போது மேலும் மூன்று புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சி, தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மற்றும் சேலத்தில் இருந்து எடப்பாடி ஆகியவை தனி மாவட்டங்களாக பிரித்து அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாவட்டங்கள் அறிவிக்கப்படும் பட்சத்தில் தமிழகத்தில் 40 மாவட்டங்கள் ஆகிவிடும். இதில் அதிக மாவட்டங்களைப் பிரித்தவர் என்ற பெருமையும் எடப்படிக்கு வந்துவிடும். 

இதுதவிர, தன்னுடைய பெயருக்கு அடையாளமாக திகழும் எடப்பாடிக்கு மாவட்ட அந்தஸ்து வாங்கிக்கொடுத்துவிட்டால், சரித்திரத்தில் இடம் பெற்றுவிடலாம் என்பதுதான் எடப்பாடியாரின் திட்டமாம்.