பேசவிடாமல் கலைஞருக்கு வீட்டுச்சிறை! ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடி வீசிய அணுகுண்டு! விசாரணை நடத்தப்படும் என்றும் ஏவுகணை!

குன்னூரில் அஇஅதிமுக வேட்பாளர் Mதியாகராஜனுக்கு வாக்கு சேகரிக்கும் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு


சுற்றுலா மாவட்டமான நீலகிரிக்கு எராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் மாவட்டம் இங்கு வாகனம் நிறுத்த பார்கிங் அமைத்து தரப்படும். அம்மா மிகவும் விரும்பும் மாவட்டம் நீலகிரி மாவட்டம், இங்கு வேட்பாளராக நிற்கும் ராஜா 2009ல் நிலச்சரிவு ஏற்பட்டபோது நேரில் பார்த்து மக்களுக்கு ஒன்றும் செய்ய வில்லை.

பதவியில் வாழுகின்ற போது ஒன்றும் செய்யவில்லை ஆறுதலும்  சொல்ல வில்லை,  அன்று செய்யாதவர் இனி எப்படி செய்வார்?அவருக்கு பாடத்தை புகட்ட வேண்டும்,  நமது அரசு பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக  450 வீடுகள் கட்டி கொடுத்தோம்.

,கூடலூரில் செக்சன் 17 நிலத்தகராறு வெறும் வதந்தி யாரும் நம்ப வேண்டாம், அரசு தேயிலை தோட்ட டேன்டீ   தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை வழங்க  ஏற்பாடுகள் செய்துள்ளேன். குன்னூருக்கு    குடிநீர் வழங்க எமரால்டு குடிநீர் திட்டம் 95 கோடியில்   பணிகள் நடைப் பெற்று வருகிறது. குன்னூர் குடிநீர் பிரச்சனை விரைவில் தீர்ந்து விடும்.

குன்னூர்லெவல்கிராஸ் பகுதியில் மேம்பாலம் கட்டப்படும் ,பார்கிங் வசதி செய்து தரப்படும் ,  மார் கெட் , வடகை பிரச்சினை  வரைமுறை படுத்தப்படும் , நீலகிரியில் கட்டிடம் கட்ட மாஸ்டர் பிளான் பரிசீலித்து புதுபிக்கப்பட்டு வருகிறது  , அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 12ரூபாய் சம்பளம் உயர்த்தி உள்ளது. கொடநாடு கொலை வழக்கில் என்னை சம்பந்தப்படுத்தி பேசியது பச்சை பொய் சையன்,மனோஜ்  ஆகியோர்களை கைதுசெய்தது சிறையில்  அடைத்தது அவர்கள்மீது குண்டர் சட்டம் போட்டது அம்மா அரசுதான்.

கேரளாவைச் சேர்ந்த இவர்கள் பாலியல், ஆள்கடத்தல்,திருட்டு, கொலை ,கொள்ளையில் சம்மந்தப்பட்ட இவர்களுக்கு ஓட்டலில்  கட்டப்பஞ்சாயத்து நடத்திய கொள்ளை கூட்ட  தலைவர் தான் ஸ்டாலின். கருணாநிதி உயிருடன் இருக்கும் போதே இவருக்கு திமுக தலைவர் பதவி கொடுக்க வில்லை கருணாநிதியை இரண்டு வருடம் வீட்டுச் சிறையில் வைத்தவர் உயர் சிகிச்சை அளித்து  அவரை காப்பாற்றி இருக்கலாம் ,கருணாநிதி நாட்டின்  முதலமைச்சர் இதை நான் விட மாட்டேன்.

இப்படி பட்டவர் நாட்டு மக்களை நிம்மதியாக வாழ விட மாட்டார் 15 ஆண்டு காலம் இவர்கள் என்ன செய்தார்கள் ,கண்ணுக்கு தெரியாத காற்றுக்கு கூட ஊழல் செய்தவர் ராஜா. இவ்வாறு எடப்பாடி பேசினார்.