வீரதீர விருதுபெற்ற கடையம் தம்பதியர் வீட்டு கொள்ளையில் குழப்பம்! விடை தெரியாத பல்வேறு கேள்விகள்

கடையம் அதீத துணிவு விருது பெற்ற தம்பதியர் வீட்டு கொள்ளையில் குழப்பங்கள்.


கடையத்தை அடுத்த கல்யாணி புரத்தைச் சேர்ந்த சன்முகவேல்(72) செந்தாமரை (65) தம்பதியினரின் வீட்டில் கடந்த 11ம் தேதி இரவு நடந்த கொள்ளை முயற்சியும்,அரிவாளோடு வந்த கொள்ளையர்களை எதிர்த்து முதியவர்கள் இருவரும் தீரமுடன் போராடி விரட்டிய காட்சிகள் நாடு முழுவதும் வைரலானது.கலக்டர் பரிந்துரையின் படி அவர்களுக்கு தமிழக முதல்வர் சுதந்திரதின விழாவில் விருது வழங்கிப் பாராட்டினார்.

கொள்ளைச் சம்பவம் நடந்து பத்து நாட்களாகியிம்,சி.சி.டி.வி பதிவுகள் இருந்தும் இன்னும் கொள்ளையர்கள் பிடிபடவில்லை. இதில் சில விசயங்கள் புரியாமல் போலீஸ் தினறிக்கொண்டு இருக்கிறது.சம்பவம் நடந்த பண்ணை வீட்டில் 14 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.ஆனால் அவற்றில் 12 கேமராக்கள் டம்மி என்றும் ,இரண்டு கேமராக்கள்தான் இயங்குகின்றன அதிலும் ஒரு கேமராவில் மட்டுமே மோதல் காட்சி பதிவாகி இருக்கிறது.

விசாரணையில் போலிசாருக்கு சில சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.

தங்களிடம் கொடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் முழுமையாக இல்லை,செந்தாமரையிடம் இருந்து கொள்ளையர்கள் 37 கிராம் நகையை பறித்ததாகச் சொல்லப்படுகிறது,ஆனால்,1நிமிடம் 17 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் செயின் பறிக்கப்படும் காட்சி இல்லை.

வீடியோ பதிவில் தேதி மாற்றப்பட்டு இருப்பதாக போலீஸ் சந்தேகப்படுகிறது.இது கொள்ளை முயற்சிச்சியா இல்லை சொத்து தகராறில் நடந்த மிரட்டலா,என்கிற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. அந்த பண்ணை வீட்டில் நாய்கள் இருக்கின்றன.ஆனால் கொள்ளைச் சம்பவத்தின் போது அந்த நாய்கள் குலைக்கவில்லை.அதனால் முகமூடி அணிந்து வந்த இளைஞர்கள் அங்கே அடிக்கடி வந்து போகிறவர்களாக இருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

போலீசார் கல்யாணி புரத்தைச் சேர்ந்த இளைஞர்களை பிடித்து சென்று விசாரித்ததைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கடந்த 16ம் தேதி சாலை மறியல். அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி ஜாகிர் உசேனிடம் மக்கள் கொடுத்த புகாரில் இன்னொரு அதிர்ச்சி செய்தியைச் சொல்லி இருக்கிறார்கள்.சம்பவம் நடந்த தினத்தன்று அருகில் உள்ள இன்னொரு பண்ணை வீட்டில் பூட்டை உடைத்து வேட்டைக்கு பயண்படுத்தும் ஒரு டபுள் பேரல் துப்பாக்கியும்,அரிவாள்களும் திருடப் பட்டிருக்கின்றன.

இதனால் நாங்களும் ஆபத்தில்தான் இருக்கிறோம்.விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம். எங்கள் ஊரில் உள்ளவர்களை துன்புறுத்தக்கூடாது.கொள்ளை நடந்த வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை முழுமையாக பார்த்து விட்டு விசாரியுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.

சமீபத்தில் தூத்துக்குடி,திருநெல்வேலி காவல்துறை உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். திருநெல்வேலி,தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இன்ஸ்பெக்ட்டர்கள்,மணல் கடத்தல் ,கஞ்சா,காற்றாலை என்று பலவிதமான மாமூல்கள் வருவதால் உல்லாச வாழ்க்கை வாழ்கின்றனர்.அவர்கள் ஸ்டேஷனில் இருப்பதை விட பக்கத்தில் உள்ள பண்ணை வீடுகளில் உல்லாசமாக இருக்கும் நேரமே அதிகம்.

இந்த கொள்ளைச் சம்பவத்தை போலீசார் தீவிரமாக விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்கிறார்கள் கீழ்நிலை காவலர்களும் ,உள்ளூர் மக்களும்.