பிரண்டையை சாப்பிட்டவர் புண்ணியவான்! ஏன்னு தெரியுமா?

சாதாரணமாக வேலியோரங்களில் விளையக்கூடிய கொடி வகையைச் சேர்ந்தது பிரண்டை. இதற்கு வச்சிரவல்லி என்ற பெயரும் உண்டு. இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாக விளைகிறது பிரண்டை.


காரத்தன்மையும் எரிப்புத்தன்மையும் கொண்ட பிரண்டை சாறு உடலில் பட்டால் நமைச்சல் ஏற்படும். கணுக்களின் அமைப்பை கொண்டு ஆண் பிரண்டை, பெண் பிரண்டை என்று பிரித்து அறியப்படுகிறது. அனைத்துமே நிரம்பிய மருத்துவத் தன்மை கொண்டது.

·         பசியைத் தூண்டிவிடும் தன்மை பிரண்டைக்கு உண்டு என்பதால் உடல் பலம் அடைய உதவுகிறது.

·         மலச்சிக்கல், செரிமானக் கோளாறு, வயிற்றுப் பூச்சி போன்றவற்றை நீக்கும் தன்மை பிரண்டைக்கு உண்டு.

·         பிரண்டையை சாறு எடுத்து குடித்துவந்தால் எலும்புகள் பலம் பெறும். நரம்புகள் புத்துணர்ச்சி அடையும்.

·         பிரண்டையை வடகமாக அல்லது குழம்பாக செய்து சாப்பிடுபவர்களுக்கு தலைமுடி வளர்ச்சி அடையும், தோல் பளபளப்படையும்.

பிரண்டையில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, மாவுப்பொருள், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்றவை நிரம்பியுள்ளதால் வீட்டில் இதனை வளர்த்து பயன்பெற வேண்டுகம்.