வெயில் காலத்தில் நுங்கு பார்த்தா விட்றாதீங்க… உடனே வாங்கி சாப்பிடுங்க.

பனையானது தமிழ் மாநில மரமாகும். பனை மரத்தின் அத்தனை பகுதிகளும் உணவாகவும் மருந்தாகவும் பயன் தருகிறது. நாட்டு மருத்துவத்தில் பதநீர், நுங்கு போன்றவைகளுக்கு தனியிடம் உண்டு.


நுங்கு வெயில் காலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியது என்பதால்அந்த நேரத்தில் அவசியம் வாங்கி பயன்படுத்த வேண்டும்இயற்கை அளிக்கும் அருட்கொடை என்றே நுங்கை சொல்லலாம்.

·         வயிற்று வலிவயிற்றுப் புண்அஜீரணம் போன்ற பிரச்னைகளுக்கு நுங்கு மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது.

·         வியர்க்குருபுண் போன்ற தோல் நோயினால் அவஸ்தைபடுபவர்கள் நுங்கு தேய்த்துக் கழுவினால் அரிப்புசொறி போன்றவை நீங்கும்.

·         நுங்குடன் ஏலக்காய் கலந்து ஜூஸ் செய்து சாப்பிட்டால் உடல் உஷ்ணம் குறையும்.

·         சிறுநீர் எரிச்சல்சிறுநீரக குறைபாடு உள்ளவர்களுக்கு நுங்கு மிகவும் பயனளிக்ககூடியதாக இருக்கிறது.

இளநுங்கில் மட்டுமே நிறைய சத்துக்க்கள் இருக்கின்றனமுற்றிய பனை நுங்கை உட்கொள்ளக்கூடாது.