வகுப்பறையில் வைத்து ஆசிரியரை பிரம்பால் வெளுத்த மாணவர்கள்!

வகுப்பறைக்குள் வைத்து ஆசிரியர் ஒருவரை மாணவர்கள் பிரம்பால் வெளுத்த காட்சிகள் வைரல் ஆகி வருகிறது.


சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அறிவியல் ஆசிரியராக ஜாதவ் பணியாற்றி வருகிறார். இவர் வகுப்பிற்கு முறையாக வருவதில்லை, முறையக பாடம் கற்றுக் கொடுப்பது இல்லை என்று ஏற்கனவே ஏகப்பட்ட புகார்கள் உள்ளன.

   இந்த நிலையில் ஆசிரியர் ஜாதவ் பள்ளிக்கு குடித்துவிட்டு போதையில் வர ஆரம்பித்துள்ளார். ஆசிரியர் போதையில் வருவது குறித்து மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் பல முறை புகார் அளித்துள்ளனர். ஆனால் தலைமை ஆசிரியர், குடித்து விட்டு வரும் ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

   இந்த நிலையில ஆசிரியர் ஜாதவ் மீண்டும் குடித்துவிட்டு வகுப்பறைக்கு வந்துள்ளார். வழக்கத்தை விட மிதமிஞ்சிய போதையில் இருந்த ஆசிரியர் ஜாதவ் ஒரு கட்டத்தில் வகுப்பறையில் படுத்து உறங்கியுள்ளார். அவரை எழுப்பி எழுப்பி மாணவர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால் ஆசிரியர் எழும்பவில்லை. இதனால் கோபம் அடைந்த மாணவர்கள் அருகே இருந்த பிரம்பை எடுத்து ஆசிரியை சாத்த ஆரம்பித்துள்ளனர்.

   குடித்துவிட்டு வகுப்பிற்கு வருவாயா? வருவாயா? என கேட்டுக் கொண்டே மாணவர்கள் ஆசிரியரை விளாசியுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து தற்போது வாட்ஸ் ஆப்பில் பரப்பியுள்ளார். வழக்கமாக மாணவர்கள் குடித்துவிட்டு வந்தால் ஆசிரியர் பிரம்பால் வெளுப்பது வழக்கம். ஆனால் சத்தீஸ்கரில் குடித்துவிட்டு வந்த ஆசிரியை மாணவர்கள் வெளுத்துள்ளனர்.

   ஆசிரியரை வெளுத்த மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதே சமயம் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.