காதலி மீது சந்தேகம்! காதலை பரிசோதிக்க நடுரோட்டில் இளைஞன் செய்த திடுக் சம்பவம்! பிறகு நேர்ந்த விபரீதம்!

சீனாவில் மது போதையின் ஆதிக்கத்தில், தன் மீதான மனைவியின் காதலை சோதிக்க எண்ணி பரபரப்பான சாலையின் நடுவில் சென்று நின்ற நபர் மீது வேன் மோதிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன


சென் ஜியாங் மாகாணம் ஜின்ஹுவா நகரைச் சேர்ந்தவர் பான். இவர் பரபரப்பான சாலை ஒன்றில் இரவு நேரத்தில் அதிவேகமாகச் சென்றுகொண்டிருக்கும் வாகனங்களுக்கு இடையே நடுச்சாலையில் சென்று நிற்பதும் அவரது மனைவி ஷோவ் அவரை மீண்டும் மீண்டும் சாலையோரம் இழுத்துச் செல்வதுமான காட்சிகள் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளன.

வாகனங்கள் அனைத்து பான் மீது மோதாமல் விலகி விலகிச் செல்வதும் அவரது மனைவி ஷோவ் பதற்றத்துடன் தடுமாறுவதுமான காட்சிகளும் பதிவாகியிருந்தன. இரவு நேர இருளில் அனைத்து ஒட்டுநர்களும் நிதானத்தை கடைபிடித்து விடுவார்கள் என்று சொல்ல முடியுமா இறுதியில் வேன் ஒன்று பான் மீது மோதிவிட்டுச் செல்வதும் அவரது மனைவி பதற்றதுடன் ஓடி வருவதுமான காட்சிகளும் சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளன

தூக்கி வீசப்பட்ட பான் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தலையில் காயமும் நெஞ்சில் சிராய்ப்பும் ஏற்பட்ட நிலையிலும் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயங்கள்  பலமாக இல்லாததால் உயிர் தப்பினார். அவர் மது அருந்தியிருந்ததும் பரிசோதனையில் தெரியவந்தது.

ஆபத்தான கட்டத்தில் மனைவி தன்னை எப்படி காப்பாற்றுகிறார் என்று தெரிந்து கொள்ள அந்த நபர் இந்த விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.