3 குழந்தைகளை கார் ஏற்றி கொலை செய்த கொடூரன்! பிறகு அரங்கேறிய தரமான சம்பவம்!

பீகார் மாநிலத்தில் குடித்து விட்டு தலை கால் புரியாமல் ஓடிய கார் மோதி 3 குழந்தைகள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


பீகார், குமர்ஹர் பகுதியில் சாலை ஓரம் கட்டிட வேலை செய்பவர்கள் தூங்குவது வழக்கம் அதன் படி நேற்று நள்ளிரவில் அந்த வழியாக குடித்து விட்டு காரை படு வேகமாக ஒட்டி வந்தவர், நிலை தடுமாறி நடைபாதையில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றி நிறுத்தினர்.

இதில் சம்பவ இடத்திலேயே 3 குழந்தைகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த மற்றொரு குழந்தை மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறது.

இந்த கோர சம்பவத்தை பார்த்த பொது மக்கள், காரை ஓட்டிவந்தவர்களை மடக்கி பிடித்து தர்ம அடிக்கொடுத்ததில் அவுரவ் கங்குலி என்பவர் சம்பவ இடத்திலேயே பலி, மற்றொரு படு காயமடைந்த நிலையில் மீட்கபட்டார்.தகவல் அறிந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.