நம்பி வந்து கரம் பிடித்த 19 வயது காதலி! கஞ்சா போதையில் காதலன் அரங்கேற்றிய கொடூரம்!

கேரளாவில் கோட்டயம் பகுதியில் கஞ்சா போதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியை கொடூரமாக கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அருகிலுள்ள சாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சுபின் 25, இவர் அஸ்வதி 19, என்ற பெண்ணை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் இருவீட்டாரின் பெற்றோர்களுக்கு தெரிய வரவே முதலில் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் பின்னர் இருவரின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டு சுபின் தந்தையின் வீட்டின் அருகிலேயே தனி வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே சுபினுக்கு கஞ்சா பழக்கம் இருப்பது அவரது மனைவி அஸ்வதிக்கு தெரியவந்தது. இந்நிலையில் அதனை கண்டித்த அவரது மனைவிக்கும் சுபினுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடுமையான கஞ்சா போதையில் சுபின் வீட்டிற்கு வந்துள்ளார்.

அதைப் பார்த்த அஸ்வதி ஆத்திரமடைந்து தனது கணவரை கடுமையாக திட்டியுள்ளார். இந்நிலையில் கோபமடைந்த சுபின் தனது மனைவியை தாக்கியுள்ளார் அருகே உள்ள சுவற்றில் அவரது தலையை மோதி உள்ளார் இந்நிலையில் பலத்த காயமடைந்த அஸ்வதி ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார்.மற்றும் அதை தடுக்க வந்த அவரது தந்தை மற்றும் தாயை சுபின் கடுமையாக தாக்கியுள்ளார்.  

இதில் அவர்களும் பலத்த காயமடைந்துள்ளனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனே ஓடி வந்து காயமடைந்தவர்களை முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அஸ்வதி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த சுபின் அங்கு பணியில் இருந்த மருத்துவர்களையும் கத்தியை காட்டி மிரட்டிள்ளார். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தை அறிந்த வந்த காவல்துறையினர் சுபினை கைது செய்து ஜீப்பில் ஏற்றியுள்ளனர். அப்போது பைத்தியம் பிடித்தது போல் வாகனத்தின் கண்ணாடியை உடைத்துள்ளார்.

பின்னர் கத்தியை வைத்து தனது கையையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை கைது செய்த பொலிசார் அவரை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சுபினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவருக்கு சிகிச்சை முடிந்ததும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.