பிரமாண்ட சுத்தியலை எடுத்து வந்து மகள் மீது ஒரே போடு..! வீட்டுக்குள் தந்தை அரங்கேற்றிய பயங்கரம்! பதைபதைக்க வைக்கும் காரணம்!

பெங்களூரு: பெற்ற மகள் என்றும் பாராமல் சுத்தியலால் தாக்கிய கொடூர தந்தை கைது செய்யப்பட்டார்.


கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள சாகலேஷ்புரா, சாம்பக்நகரில் வசிப்பவர் பிரசாந்த். 47 வயதான இவருக்கு  12 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், கடந்த நவம்பர் 2ம் தேதி இரவு 10 மணியளவில், பிரசாந்த் சுத்தியல் ஒன்றை எடுத்து  தனது மகளின் இடது கையில் அடித்துள்ளார். இதனை அவரது மகளே வீடியோவாக பிடித்து, சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். 

தனது தாத்தாவிடம் காட்டுவதற்காக விளையாட்டிற்கு ஒரு வீடியோவை அந்த சிறுமி எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது குடிபோதையில்  வந்த பிரசாந்த், ''சுத்தியல் ஒன்றை எடுத்துக் கொண்டு, கேஜிஎஃப் படம் பார்த்திருக்கிறாயா? இப்போது பார், உன்னை அதுபோல அடிக்கப் போகிறேன், எனது அப்பா இப்படித்தான் செய்வார்,'' என்று கூறியபடி சிறுமியின் இடது கையில் ஓங்கி அடிக்கிறார். இதனை வலியை பொறுத்தபடி கையில் ரத்தம் வழிந்தோடும் நிலையிலும் அந்த சிறுமி தத்ரூபமாக வீடியோ எடுத்துள்ளார்.  

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இதுபற்றி வழக்குப் பதிந்த போலீசார் பிரசாந்தை கைது செய்தனர்.