மனைவியின் அந்த உறுப்பை இஸ்திரிப் பெட்டியால் பொசுக்கிய கொடூரக் கணவன்! அதிர வைக்கும் காரணம்!

குஜராத் மாநிலத்தில் மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவன் பெல்ட்டாலும், கம்பாலும் சரமாரியாகத் தாக்கியும் ஆத்திரம் தீராமல், இஸ்திரிப் பெட்டியால் பிறப்புறுப்பை பொசுக்கிய கொடூரம் அரங்கேறியுள்ளது.


அகமதாபாத்தில் உள்ள ராய்கண்ட் என்ற இடத்தைச் சேர்ந்த பெண் தனது ஆண் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அவர்களுக்குள் தவறான தொடர்பு என எண்ணி தனது கணவர் ஆத்திரமுற்று இந்தக் கொடூரத்தை அரங்கேற்றியிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளன்ர். 

அந்தப் பெண் இரண்டு குழந்தைகளுக்குத் தாய். தன்னுடன் குடும்பம் நடத்தி இரு குழந்தைகளுக்கு தாயான 40 வயது பெண்ணின் மீது அவரது 45 வயதுக் கணவனுக்கு நம்பிக்கை இல்லை. தாக்க்குதல்கள் கடந்த 22 மற்றும் 23 ஆகிய இரு தேதிகளிலும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. ஆண் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த மனைவி மீது அவரது கணவன் சந்தேகமும் ஆத்திரமும் கொண்டார். அதனைத் தொடர்ந்து வழக்கமான வசவுகளும் தரக்குறைவுப் பேச்சுகளும் தொடங்கின. 

அது அடுத்த கட்டத்துக்குப் போன போது சொல்லவொண்ணா சித்திரவதைகளை அனுபவித்ததாக காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். அந்தப் பெண் தனது கணவன் பெல்ட்டாலும், கம்பாலும் சரமாரியாகத் தாக்கியதாகவும் அதைத் தாங்காமல் சோர்ந்து தரையில் விழுந்த தனது தொடையிலும் பின்புறத்திலும்  எட்டி உதைத்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இஸ்திரிப் பெட்டியை சூடேற்றிய தனது கணவன் அதனைக் கொண்டு தனது பிறப்புறுப்பை பொசுக்கியதாகக் கூறியுள்ளார். 

இந்நிலையில் கணவன் வெளியில் சென்ற போது வீட்டில் இருந்து தப்பித்து தோழி வீட்டுக்குச் சென்றதாகவும் அங்கிருந்து காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவன் குடும்ப வன்முறைச் சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். 

இதனிடையே மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்ற அந்தப் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், பிறப்புறுப்பில் காயம் ஆழமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.