வீட்டுக்குள் நுழைந்த 5 அடி நாகப் பாம்பு! பார்த்து கதறிய குழந்தைகள்! மின்னல் வேகத்தில் வந்து காப்பாற்றிய நாய்! ஆனால்..?

ஒடிசாவில் வீட்டிற்குள் நுழைந்த 5 அடி நாகப் பாம்பை கடித்து குதறி குழந்தைகளை காப்பாற்றிய நாய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசாவில் கோத்ரா பகுதியை அடுத்த முன்தஹா என்னும் கிராமத்தைச் சேர்ந்த சுனில் என்பவர் லேடன் என்னும் ராட்வீலர் ரக நாயை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் லேடன் சம்பவத்தன்று வீட்டு வாசலில் கட்டப்பட்டு இருந்தது. சுனிலின் பேரகுழந்தைகள் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஐந்து அடி நாகப் பாம்பு ஒன்று அங்கு வந்தது. அதை கண்ட குழந்தைகள் கதறி அழத் தொடங்கினர். இதையடுத்து மந்திரிகள் குழந்தைகள் அலரியதால் சட்டென்று சீறிப்பாய்ந்த லேடன் பாம்பை கடித்து குதறியது. இந்த சண்டையில் மிகவும் ஆத்திரமடைந்த லேடன் தன்னைத் தானே கடித்துக்கொண்டது.

குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டு வெளியே பெரியோர்கள் வந்து பார்த்த பொழுது வேடன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் லேடனை தூக்கி கொண்டு கால்நடை மருத்துவமனைக்கு ஓடினர்.

ஆனால் அங்கு சென்றதும் நாய் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சுனில் மனைவி கூறுகையில், லேடன் கட்டுப்படாமல் இருந்திருந்தால் ஒருவேளை உயிர் தப்பியிருக்கும். மிகவும் விசுவாசமான ஜிவி அது. எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று எங்கள் வீட்டு பிள்ளைகளை காப்பாற்றுவதற்கு அதன் உயிரை தியாகம் செய்து இருக்கிறது.

மறு பிறவி என்று ஒன்று இருந்தால் அடுத்த பிறவியில் எனக்கு லேடன் மகனாகப் பிறக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். குழந்தைகளை காப்பாற்ற நாய் உயிரைவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.