மகளை கைத்து விபச்சாரம் செய்வதற்கு மேலான ஒரு கேவலமான வேலையை செய்து பணம் பறிக்க முயன்ற தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
உன் மகனும் என் மகளும் லாட்ஜில் நெருக்கமா இருந்த வீடியோ..! மகளை பயன்படுத்தி டாக்டரிடம் பணம் பறித்த விபரீத பெற்றோர்! அதிர வைக்கம் சம்பவம்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் லீனா கவிதா, பிரமோத் குமார் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களின் 21 வயது மகளும், ஒரு பல மருத்துவரும் ஆன்லைன் மூலம் அறிமுகம் ஆக இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். பின்னர் இருவரும் ஒரு ஓட்டலுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இதை தெரிந்து கொண்டு சென்ற அந்த பெண்ணின் பெற்றோர் லாட்ஜில் இருந்த பெண்ணை அழைத்துக் கொண்டு வந்துவிட்டனர். சில நாட்களுக்கு பிறகு அந்த பல் மருத்துவருக்கு விரிவுரையாளர் பணி கிடைத்துள்ளது. தற்போது அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதால், சம்பளமும் அதிகம் கிடைக்கும் என்பதால் அவரிடம் இருந்து பணத்தை பறிக்க லீனா கவிதா, பிரமோத் குமார் தம்பதி திட்டமிட்டுள்ளனர்.
அந்த பல் மருத்துவரின் தாய் ஆஷலதாவை தொடர்பு கொண்ட தம்பதி எங்கள் மகளும், உங்கள் மகனும் நெருக்கமாக உள்ள வீடியோ உள்ளதாது. அதை இணையதளத்தில் போட்டுவிடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இந்த பிரச்சனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் 1 கோடி ரூபாய் தரவேண்டும் என கூறியுள்ளனர்.
இதை அடுத்து பயந்து போன ஆஷலதா அந்த பெண்ணின் பெற்றோருக்கு 22 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். பின்னர் மீண்டும் தொடர்பு கொண்டு பெண் கர்ப்பமாக உள்ளதாகவும் அதை கலைக்க வேண்டும் என்றால் 20 லட்சம் வேண்டும் என்றும் கேட்டு வாங்கி உள்ளனர். அதன்பிறகும் அவ்வப்போது மிரட்டி பணம் பறிக்கவே மன உளைச்சல் அடைந்த பல் மருத்துவரின் தாய் போலீசில் புகார்அளிக்க அந்த பெண்ணின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த மோசடி குறித்து அந்த பெண்ணிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
பணம் கேட்டு மிரட்டும் நாள் அன்றே போலீசில் புகார் அளித்திருந்தால் இவ்வளவு பணத்தை இழந்திருக்க தேவை இல்லை. மேலும் இந்த தம்பதி இவர்களிடம் மட்டும்தான் மோசடி செய்துள்ளார்களா அல்லது சின்ன வீடு படத்தில் வரும் வில்லி போல் பல தொழிலதிபர்களையும் மிரட்டி பணம் பறித்துள்ளார்களா என விசாரித்து வருகின்றனர்.