நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் தயார்! டெல்லியில் தயாரான இறுதிப்பட்டியல்! யார் தெரியுமா?

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வசந்த குமார் எம்.பி ஆகிவிட்டதால் காலியான அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


அந்த தொகுதிக்கான அதிமுக வேபாளரும் அறிவிக்கப்பட்டு விட்டார்.ஆனால் காங்கிரஸ் இன்னும் அறிவிக்கவில்லை.நாங்குநேரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பாக,.பழம்பெரும் காங்கிரஸ் தலைவரும்,வசந்த குமாரின் அண்ணனுமான குமரி அனந்தன் உட்பட இதுவரை 21 பேர் விருப்ப மனு அளித்திருக்கிறார்கள்.

இவர்களிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி,மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.நேர்காணல் முடிந்ததைத் தொடர்ந்து அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட பட்டியலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இன்று டெல்லி சென்று அந்தப் பட்டியலை சோனியா காந்தியிடம் அளிக்கிறார்.

அந்த மூன்று பேரில் ஒருவர் பெயரை இறுதி செய்து வரும் 27ம் தேதி சோனியா காந்தி வெளியிட இருக்கிறார். அந்த மூன்று பேர் கொண்ட பட்டியலில் மூத்த தலைவர் குமரி அனந்தன்,இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ்,ரூபி மனோகரன் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். இந்த மூவருக்கு இடையிலான போட்டியில் இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் முதலிடத்தில் இருப்பதாகத் தெரிகிறது