எடப்பாடி தூக்கப் போகும் 2வது விக்கெட்! திக் திக் மனநிலையில் அமைச்சர்கள்!

வேலூர் தேர்தல் முடிவுபற்றி தமிழிசையைத் தவிர பிஜேபியில் யாருமே மகிழ்ச்சி தெரிவிக்காத வருத்தத்தில் இருக்கிறார் எடப்பாடி!.இன்று சென்னை வரப்போகும் அமித்ஷாவுக்கு சமாதானம் சொல்லவும் ,பழி போடவும் ஒரு தலை வேண்டாமா?


அந்தத் தலையைத் தேர்ந்தெடுத்து விட்டார் எடப்பாடி.அமைச்சர் மணிகண்டன் வெளியேற்றத்துக்கு  எந்த எதிர்ப்பும் இல்லாததால் எடப்பாடி ஜெயலலிதா பாணியில் கலைத்துக் கலைத்து விளையாடத் தயாராகி வருகிறார்.வேலூர் மேற்கு மாவட்ட செயலாளராக இருக்கும் கே.சி வீரமணிதான் எடப்பாடியின் அடுத்த விக்கெட்.

இடைத்தேர்தல் தோல்விக்கு காரணம் வீரமணிதான் என்று சொல்லி அவர் வெளியேற்றப்படலாம் என்கிறது கோட்டை வட்டாரம்.அவர் வன்னியர் என்பதால் முக்குலத்தோர், கவுண்டர் சமுதாயத்தை விட்டால் அடுத்து அதிக எம்.எல்.ஏக்கள் கொண்ட சமூகம் என்பதால் பவர்ஃபுல் இலாக்காக்கள் பறிக்கப்பட்டு டம்மி ஆக்கப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே அமைச்சர் என்கிற அதிகாரத்தில் பல கட்சிக்காரர்களை அலட்சியப்படுத்தியதும்,மாவட்டத்தின் இரண்டாவது பெரிய ஓட்டு வங்கியான வன்னியர் ஓட்டுக்கள் இரட்டை இலையில் விழாததற்கும் வீரமணிதான் காரணம் என்கிறார்கள் உள்ளூர் ரத்தத்தின் ரத்தங்கள்.

ஆனால்,இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அமைச்சர் மணிகண்டன் வகித்தது ஐ.டி துறைதான் என்பதால் அதை உதயகுமாரிடம் கொடுத்து விட்டார்,அதை யாரும் கண்டுகொள்ளவும் இல்லை.ஆனால்,கே.சி வீரமணியிடம் இருக்கும் இரண்டு துறைகளும் பணம் கொட்டும் துறைகளான வணிகவரியும்,பத்திரப்பதிவும்.

அதை இன்னொரு அமைச்சரிடம் தந்தால் பணிச்சுமை அதிகமாகிவிடும்.அதனால் ஒரு புதிய அமைச்சர் நியமிக்கப் படுவது உறுதி.அப்படி வீரமணியைத் தூக்கிப் போடுவதில் எதிர்ப்பு வந்தாலும் அமித்ஷா என்கிற பூச்சாண்டியை காட்டிச் சமாளிக்கலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டார் எடப்பாடி. இதில் அவர் வெற்றி பெற்றுவிட்டார் அதிமுகவில் பழைய மாமூல் நிலமை திரும்பும் என்று நிச்சயமாக எதிர் பார்க்கலாம்.