பிரசவம் நடந்ததும் முதல் பாலூட்டல் எப்போது கொடுக்க வேண்டும் தெரியுமா?

வயிற்றுக்குள் இருந்தவரையிலும் தேவையான சத்துக்களை கொடுத்துவந்த தாய், குழந்தை வெளியே வந்த பிறகும் பால் கொடுத்து வளர்க்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறாள். தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு முழுமையான ஊட்டச்சத்து பானமாக கருதப்படுகிறது.


குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் முதல் பாலூட்டலை தாய் தொடங்கிவிடலாம். இப்போது தாயின் மார்பு மென்மையாக மாறியிருக்கும். மார்பில் இருந்து கொலஸ்ட்ரம் எனப்படும் சீம்பால் வெளிவரும்.

மஞ்சள் நிறத்தில் காணப்படும் சீம்பால் குறைந்த அளவே வெளிவரும் என்றாலும் அளப்பரிய சத்துக்கள் கொண்டது என்பதால் தயக்கமின்றி குழந்தைக்கு கொடுக்கவேண்டும். ஆரம்பத்தில் ஒரு நேரத்தில் ஐந்து மில்லியில் இருந்து 15 மில்லி வரை கொடுப்பதே போதுமானதாக இருக்கும்.

மஞ்சள் நிறத்துடன் வெளிவரும் கொலஸ்ட்ரம் எனப்படும் பாலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், இதனை கொடுப்பதற்கு தவறவே கூடாது. அதுபோல் எப்போதும் ஒரு மார்பகத்தில் மட்டும் பால் கொடுக்கக்கூடாது, இரண்டு பக்கமும் மாற்றி மாற்றி பால் கொடுப்பதுதான் தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது.