அத்திவரதரை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வணங்குவது ஏன் தெரியுமா?

அத்திவரதரை தண்ணீரில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுத்து, தரிசனம் செய்து மீண்டும் தண்ணீரில் வைக்கிறார்கள். இது எப்படி நடைமுறைக்கு வந்தது தெரியுமா?


இஸ்லாமிய படைகளின் கொள்ளையில் இருந்து பாதுகாக்கவே அத்திவரதரை குளத்து நீரில் ஒளித்து வைத்து விட்டார்கள். உற்சவரான வரதராஜனை உடையார் பாளையம் ஜமீந்தார் நல்லப்ப காலாட்கள் தோழ உடையாரிடம் ஒப்படைத்து விட்டார்கள். அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் உடையார் பாளையம் காட்டுப்பகுதி என்பதால் பெரும் படைகளை அதனூடே நடத்துவது கடினம் என்பது அவர்கள் கணக்கு. வரதன் மட்டுமல்ல தஞ்சை பங்காரு காமாட்சியும் உடையார் பாளையத்தில்தான் அடைக்கலம் புகுந்திருந்தாள்.

உடையார் பாளையத்தில் வரதராஜனையும், காமாட்சியையும் வைத்திருந்த இடங்கள் இப்போதுமிருக்கின்றன.காஞ்சி வரதராஜன் கோவிலில் 40 ஆண்டுகள் பூஜையே நடக்கவில்லை. இந்த அவலம் ' மதுரை ,திருவரங்கம் கோவில்களுக்கும் நடந்திருக்கிறது'. விஜயநகரத்தின் கமபண்ணன் படைகள் வந்து மீட்கும் வரை அரை நூற்றாண்டு காலம் அங்கும் பூஜைகள் ஏதும் நடக்காமல் மூடிக்கிடந்திருக்கின்றன. ஆங்கிலேயர்கள் ஓரளவு காலூன்றிய பிறகுதான் அமைதி திரும்பி இருக்கிறது.

1709 வரை அத்திவரதர் அத்திவரதன் தண்ணீருக்குள் வைத்ததே மறந்துபோய் பழைய சீவரத்தில் இருந்து ஒரு பெருமாள் சிலையை கொண்டுவந்து வைத்து வழிபட்டுக்கொண்டு இருந்திருக்கிறார்கள். 1709ல் ஏற்பட்ட வறட்சியால் அமிர்தசரஸ் வற்றிவிட அத்திவரதன் வெளிப்பட்டிருக்கிறார். அதற்குள் பழையசீவரத்தில் இருந்து வந்தவரை வணங்கிய தலைமுறை அவரை மாற்ற மனதில்லாமல் செய்த ஏற்பாடுதான் இந்த 40 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் வைபவம்.

இந்த சரித்திரத்தை நினைவூட்டத்தான் ,பழைய சீவரத்துக்கு பரிவேட்டைக்கு போவதும்,உடையார் பாளையம் உற்சவமும் நடத்துகிறார்கள்.