குழந்தையின் அழுகையின் அர்த்தம் என்ன தெரியுமா?

குழந்தைக்குத் தெரிந்த ஒரே மொழி அழுகை மட்டும்தான். புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள், இந்த அழுகைக்கு காரணம் தெரியாமல் தாங்களும் சேர்ந்து அழுவதுண்டு. கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் குழந்தையின் அழுகைக்கான காரணங்களை அறிந்துகொள்ள முடியும்.


பசிக்கான அழுகை முதலில் குறைந்த சத்தத்துடன் சாதாரணமாக தொடங்கும். அப்போது நீங்கள் பாலூட்டவில்லை என்றால் சத்தம் அதிகரிக்கும் பூச்சி கடித்தல் அல்லது ஏதேனும் பொருள் உடலில் பட்டு வலி ஏற்பட்டால் சட்டென அழுகை அதிகமாக ஆரம்பிக்கும்.

தூக்கத்தில் இருந்து விழித்தல், குழப்பம் போன்ற நேரங்களில் சிணுங்கலாக அழுகை தொடங்கும். உடனே சமாதானப்படுத்தவில்லை என்றால் அழுகை அதிகரிக்கலாம்ஈரமான டயபர் அல்லது சில்லென்ற காற்று போன்ற காரணங்களாலும் குழந்தை அழுவதுண்டு.

பசி இல்லாதபட்சத்தில் குழந்தை எதற்காக அழுகிறது என்பதை கண்காணிப்பதில் தாய் அக்கறை செலுத்த வேண்டும். கைகளில் தூக்கி வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அழும் குழந்தைகளும் உண்டு. அதனால் மழலையின் மொழியை நிச்சயம் தாய் அறிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும்.