தூங்குறப்போ அடிக்கடி என்னை பேய் அமுக்குதுன்னு நிறைய பேரு சொல்ல கேட்டுருப்போம்! அது என்னனு தெரியுமா?

தூங்குறப்போ அடிக்கடி என்னை பேய் அமுக்குதுன்னு நிறைய பேரு சொல்ல கேட்டுருப்போம்..


அவ்வளவு ஏன் நம்மில் பலருக்கு அந்த அனுபவம் இருக்கும்.. அது ஏன்? உண்மையிலயே பேய் தான் அமுக்குதா? பாப்போம்.. உறக்கத்தில் #இரண்டு நிலை இருக்கு. ஒன்று #விரைவான கண் இயக்கம் அல்லது RAPID EYE MOVEMENT(REM) மற்றொன்று அதற்கு #எதிர்பதம் NonREM (NREM). 

நீங்க உறங்க தொடங்கியதும் உங்களுக்கு முதலில் நிகழுவது NREM. அடுத்து REM நிகழும். இப்படி இரண்டும் மாறிமாறி நிகழும் தன்மை கொண்டதே மனித உறக்கம். ஒரு REM அல்லது NREMன் சுழற்சி 90 நிமிடங்கள் வரை இருக்கலாம். NREMன் கடைசி கட்டத்திலேயே உங்கள் உடல் முழுமையா உறக்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து 100% தளர்ந்திருக்கும்.

 #சுயநினைவும் முழுசா மங்கியிருக்கும். NREM நிலை முடிந்து REM நிலை தொடங்கும்போது உங்கள் கண்கள் கொஞ்சம் இயங்கும். கனவுகளும் தோன்றும், ஆனால் இன்னும் உங்கள் உடல் தளர்ச்சி நிலையிலேயே இருக்கும்.

REM சுழற்சியில் இருக்கும் உங்கள் உடல் உறக்கத்தில் இருக்கும்போது அந்த சுழற்சி முடிவதற்குள் உங்களுக்கு சுயநினைவு தோன்றினால் உங்கள் உடல் 100% REM சுழற்சியில் இருப்பதால் அசைக்க முடியாது. மூளை விழித்திருக்கும். 

ஆனால் மூளையின் கட்டளைகளை உடல் உறுப்புகள் ஏற்கும் நிலையில் இருக்காது(இரண்டாவது படம் பார்க்க). அப்போ தான் நமக்கு தோணும், "அய்யய்யோ நான் கைகால அசைக்க ட்ரை பண்றேன் என்னால முடியல. #பேய்_அமுக்குதுபோல".

#SLEEP_PARALYSIS - இது தான் உங்களை அமுக்கிய பேய். உண்மையிலயே அது பேய் அல்ல. அது நம் உறக்கத்தில் தோன்றும் ஒரு நிலை. உலகமெங்கும் நிறைய மக்களுக்கு இந்த SLEEP PARALYSIS நிகழுது. பயப்பட தேவை இல்ல.