திமுக இளைஞர் அணி செயலாளர் திடீர் ராஜினாமா! உதயநிதி தரப்பு டார்ச்சர் காரணமா?

திமுக இளைஞரணி செயலாளர் பதவியிலிருந்து வெள்ளக்கோவில் சாமிநாதன் திடீரென விலகியுள்ளார்.


திமுகவில் இளைஞர் அணி எனும் புதிய பிரிவை உருவாக்கியவர் மு க ஸ்டாலின். தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளர் பதவியை 40 ஆண்டுகளாக மு க ஸ்டாலின் கவனித்து வந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளர் பதவியை முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இடம் ஒப்படைத்தார் மு க ஸ்டாலின். சுமார் இரண்டு ஆண்டுகளாக திமுக இளைஞரணி செயலாளர் பதவியில் வெள்ளக்கோவில் சாமிநாதன் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று திடீரென தனது ராஜினாமா கடிதத்தை திமுக தலைமைக் கழகத்துக்கு வெள்ளக்கோவில் சாமிநாதன் அனுப்பி வைத்துள்ளார்.

அதாவது தான் திமுக இளைஞர் அணி செயலாளர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக அந்தக் கடிதத்தில் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பதவி விலகலுக்கான காரணம் குறித்து வெள்ளக்கோவில் சாமிநாதன் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. அவரது ராஜினாமா கடிதம் கொடுத்தும் திமுக தலைமையகம் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் முதலே திமுக தலைவர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. அதுவும் திமுக இளைஞரணி செயலாளர் பதவியை உதயநிதி ஸ்டாலினிடம் படைக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்ட திமுக வும் தீர்மானம் நிறைவேற்றி தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வருகிறது. ஏற்கனவே திமுக இளைஞரணி செயலாளராக வெள்ளக்கோவில் சாமிநாதன் இருக்கும் நிலையில் உதயநிதியை நியமிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருவது அவருக்கு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு மாவட்ட திமுக வும் உதயநிதிக்கு கட்சிகள் பதவி கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டும் என்று உதயநிதி தரப்பு வலியுறுத்துவதன் காரணமாகவே அப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கட்சித் தலைவருக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இப்படித்தான் பதவியில் இருக்கும் போதே தனது பதவியில் உதயநிதியின் நியமிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் திமுகவினர் தீர்மானம் நிறைவேற்றுவது தன்னுடைய அரசியல் எதிர் காலத்திற்கு உகந்தது அல்ல என்று வெள்ளக்கோவில் சாமிநாதன் கருதியுள்ளார்.

இதன் காரணமாகவே திமுக தலைவர் ஸ்டாலினை கூட நேரில் சந்திக்காமல் தனது ராஜினாமா கடிதத்தை திமுக தலைமையகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார் வெள்ளக்கோவில் சாமிநாதன். இருந்தாலும் மு க ஸ்டாலின் தற்போதைக்கு உதயநிதியை கட்சிப் பதவியில் நியமிக்க தயங்கி வருவதாகவும் எனவே அதுவரை வெள்ளக்கோவில் சாமிநாதன் இளைஞரணி செயலாளர் பதவிகள் எடுக்குமாறு கேட்டுக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.