உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி உறுதி ! மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அமோக வெற்றி பெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டடுள்ள அறிக்கையில், ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தோ்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்த நிலையில் வாக்குப்பதிவுக்கான நேரம் நெருங்கி வருகிறது. திமுக ஆட்சி எப்போதெல்லாம் அமைகிறதோ, அப்போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகள் பலமாகக் கட்டமைக்கப்படும் என்பதை மக்கள் நன்றாகவே அறிவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் நினைவு சமத்துவபுரம், அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் என பல முன்னோடித் திட்டங்கள் கொண்டுவரப்பட்டது திமுக ஆட்சியில் மட்டுமே என பெருமிதம் தெரிவித்தள்ளார் மு.க.ஸ்டாலின்.

ஜனநாயகத்தின் ஆணி வேரான உள்ளாட்சி அமைப்புகளில் முறைகேடாக தோ்தல் நடந்தால், அது மாநிலம் முழுவதும் புற்றுநோய் போல பரவிடும். அதற்கு அதிகாரிகள் இடம் கொடுக்க மாட்டார்கள் என நம்புவதாக குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், திமுகவினா் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும் என கட்சியினருக்கும், தொண்டர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்.

அதிமுக ஆட்சியை விரட்டியடிப்பதற்கான முன்னோட்டம் இந்த தோ்தல் அமையும் என்றும் கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் தோ்தலில் வென்று காட்டுவோம் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.