ராமதாஸ் விவகாரத்தை தோண்டியெடுத்து கும்மியடிக்கும் தி.மு.க.! ராமதாஸ் காலேஜ் புறம்போக்கு நிலத்தில் இருக்கிறதாம்! என்ன செய்யப்போகிறார் ராமதாஸ்?

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்று ராமதாஸ் சொன்னதும், இல்லையென்று மறுப்பு தெரிவித்த ஸ்டாலின், ராமதாஸ்க்கு சவால் விட்டுள்ளார்.


அதாவது பஞ்சமி நிலத்தில்தான் முரசொலி அலுவலகம் இருக்கிறது என்றால் அரசியலில் இருந்து போய்விடுகிறேன், நீங்க ரெடியா என்று கூப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ராமதாஸ் கல்லூரி புறம்போக்கு நிலத்தில்தான் இருக்கிறது என்பதற்காக ஆற்காடு வீராசாமி முன்னரே வெளியிட்ட அறிக்கையை தி.மு.க. மீண்டும் வெளியிட்டுள்ளது. இதோ அந்த அறிக்கை. 

ஒலக்கூர் கீழ்ப்பாடி கிராமத்தில் வாய்க்கால் அமைந்திருப்பதும், அந்த பகுதியிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் 1991ம் ஆண்டு இந்த இடங்கள் கல்லூரி கட்டுவதற்காக வாங்கப்படும் வரை யார் யார் அங்கே என்ன என்ன பயிர் செய்து வந்தார்கள் என்பதற்கான விவரங்களையும், அதற்கான சர்வே எண்களையும், அவர்கள் அரசாங்கத்திற்கு செலுத்திய வரி விவரங்களையும் பின்வருமாறு தெரிவித்து கொள்கிறேன்.

வன்னியர் கல்வி அறக்கட்டளையால் கிரயம் பெறப்பட்ட நிலங்கள் சாகுபடிக்கு உரிய நிலங்களா என்பது குறித்து ஐந்தாண்டுகளுக்கு முந்தைய அடங்கல் விவரங்களை பார்வையிட்டால், அந்த நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வந்த உண்மையையும், அந்த பட்டா நிலங்கள் ஏற்கனவே விளை நிலங்களாக இருந்ததையும் அறியலாம்.

1. ஒலக்கூர் கீழ்பாதி கிராமம்-(புல.எண்) 229/2- (விஸ்தீரணம் ஹெக்டேரில்) 4.00-சவுக்கு (1411ம் பசலி ஆண்டு (2001-2002) பயிர் செய்யப்பட்டது

2.ஒலக்கூர் கீழ்பாதி- 230/1- 0.10-பூஞ்செடி பயிர் செய்யப்பட்டது

3.ஒலக்கூர் கீழ்பாதி- 230/1 - 0.90- நெல் பயிர் செய்யப்பட்டது

4.ஒலக்கூர் கீழ்பாதி- 230/3 - 4.62- சவுக்கு பயிர் செய்யப்பட்டது

5.நல்லாத்தூர்- 54/1 முதல் 12 வரை- 3.93- சவுக்கு பயிர் செய்யப்பட்டது

6.நல்லாத்தூர்- 52/1 - 0.34- சவுக்கு பயிர் செய்யப்பட்டது

7.நல்லாத்தூர் -52/2- 0.15- சவுக்கு பயிர் செய்யப்பட்டது

8.நல்லாத்தூர் -52/3 -0.15- சவுக்கு பயிர் செய்யப்பட்டது

இது தவிர வன்னியர் கல்வி அறக்கட்டளையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் தொடர்பான ஆதாரம்:

திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் கிராமத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமாக பட்டா எண் 300ல் 41.18.5 ஹெக்டேர் புஞ்செய் நிலம் உள்ளது. மற்றும் நல்லாத்தூர் கிராமத்தில் பட்டா எண் 16ல் 3.93 ஹெக்டேர் புஞ்செய் நிலம் வன்னியர் அறக்கட்டளைக்கு சொந்தமாக உள்ளது. மேற்படி இடம் முழுவதும் வன்னியர் கல்வி அறக்கட்டளையால் வேலியிடப்பட்டுள்ளது.

இந்த வேலி வளைக்கு உட்பட்ட பகுதியில் ஒலக்கூர் கீழ்பாதி கிராம எல்லைக்கு உட்பட்ட பின்வரும் அரசு புறம்போக்கு நிலங்கள் வன்னியர் கல்வி அறக்கட்டளையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

210 (புல.எண்)-4.28.0 (மொத்த விஸ்தீரணம்) - 1.20.0 (ஆக்கிரமிப்பு விஸ்தீரணம்)-மேய்ச்சல் தரை

236/2 (புல.எண்) - 0.06.5 (மொத்த விஸ்தீரணம்) - 0.06.5 (ஆக்கிரமிப்பு விஸ்தீரணம்)-அணைக்கட்டு

232/2 (புல.எண்) - 0.20.0 (மொத்த விஸ்தீரணம்) - .20 (ஆக்கிரமிப்பு விஸ்தீரணம்) - அணைக்கட்டு

இது போன்று நல்லாத்தூர் கிராம எல்லைக்கு உட்பட்ட புல.எண் 52/4ல் 1.96 ஹெக்டேர் நிலம் வன்னியர் கல்வி அறக்கட்டளையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது அரசு புறம்போக்கு பகுதியாகும்.

இந்த இடம் முழுவதிலும் வேலி வளைப்பு செய்யப்பட்டு புல் வளர்க்கப்பட்டுள்ளது. புல.எண் 54/13ல் 0.06.5 விஸ்தீரணம் கொண்ட மயான புறம்போக்குக்கு பதிலாக வேறு இடம் தருவதாக இந்த வன்னியர் அறக்கட்டளையினர் கேட்டபோது நல்லாத்தூர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் ஆக்கிரமிப்பு செய்யாமல், அந்த இடம் தப்பியது.

இந்த ஆதாரங்களில் இருந்து பல பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்த விளை நிலங்களும், அரசு புறம்போக்கு நிலங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுத்தான் அங்கே கல்லூரி உருவாகி இருக்கிறது. 

விளை நிலங்களில்தான் டாக்டர் ராமதாஸ் கல்லூரி கட்டி வருகிறார் என்பதற்கான ஆதாரங்களை தர முடியுமா? என்று கேட்டார். நான் இப்போது ஆதாரங்கள் தந்துள்ளேன். தேவைப்பட்டால், இன்னமும் ஏராளமான ஆதாரங்களை கொடுக்க தயாராக இருக்கிறேன்.என தனது அறிக்கையில் ஆற்காடு கூறியுள்ளார்.

சொல்லுங்க ராமதாஸ் பதில் சொல்லுங்க.