பா.ஜ.க.விடம் ரகசியம் பேசும் தி.மு.க. பெரும்புள்ளி..! கழுத்தை நெருக்கும் வழக்குகள்.

சமீபத்தில் ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர், டெல்லிக்குப் போய் பா.ஜ.க. தலைவர் ஒருவரை சந்தித்து சரண் அடைந்திருப்பதாக சில உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.


அப்போது, இந்த ஒரே ஒரு தேர்தலில் நாங்கள் வென்றே தீரவேண்டும். ஆகவே, எங்கள் மீது சி.பி.ஐ. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அதிரடிகளை நிகழ்த்திவிட வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டாராம்.

இனிமேல் நாங்கள் மோடியை எதிர்த்து எந்த போராட்டமும் நடத்தமாட்டோம், பா.ஜ.க. கொள்கைகளுக்கு எதிராகப் பேசமாட்டோம் என்றும் உறுதி கொடுத்திருக்கிறாராம். பொன்முடி மகனை அடுத்து இன்னும் சிலர் மீது பரபர நடவடிக்கை தொடரும் என்று சொல்லப்படுவதுதான் இந்த சரண்டருக்குக் காரணமாம்.

அந்த புள்ளி எத்தனையோ முறை கேட்டுக்கொண்டும், பா.ஜ.க. பக்கமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதுதான் தி.மு.க.வுக்கு வருத்தமான செய்தி.