ஊருக்குத் தான் உபதேசம்! ஸ்டாலினை வரவேற்று திமுக EX எம்எல்ஏ பேனர்! தொடரும் அட்ராசிட்டி!

நெல்லை மாவட்டடத்தில் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக திமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சுபாஷினி உயிரிழந்தது தொடர்பான வழக்கில் இன்னும் தீர்ப்புகூட வெளியாகவில்லை. சாலைகளில் அனுமதியின்றி பேனர் வைக்கும் அரசியல்வாதிகள் பற்றி நீதிமன்றம் பல கேள்விகள் எழுப்பி கண்டனம் தெரிவித்த நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் நீதிமன்றத்தல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தன. அதவாது கட்சி சார்பில் இனி எந்த நிகழ்ச்சிக்கும் பேனர் வைக்க மாட்டோம் என உறுதி மொழி தந்தனர். இதற்கிடையே தமிழகம் முழுவதும் வைக்கப்படும் பேனர்களை கண்காணித்து போலீசார் அவ்வப்போது அகற்றி வருகின்றனர். இதனால் பேனர் தொழிலும் முடங்கி விட்டதாக ஒருபுறம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்நிலையில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என வழக்குப் போட்டவரும் திமுக முன்னாள் எம்எல்ஏவுமான அப்பாவு இந்த பேனர் விதிகளை மீறியதாக தற்போது புகார் வெடித்துள்ளது.

நெல்லை மாவட்டம் பணகுடியில் அப்பாவு மகன் திருமண நிகழ்ச்சியை முன்னிட்டு திருமணம் நடைபெறும் ஷான் தாமஸ் மகால் மண்டபம் முன்பு பேனர் வைக்கப்பட்டது. இந்த பேனர்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதாக அப்பாவு மீது பணகுடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சாலையின் குறுக்கே மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல்தான் திருமண மண்டபத்தின் ஓரம் பேனர் வைத்துள்ளதாக கூறினாலும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இதுபோல் வழக்குப் பதிந்துள்ளதாக அப்பாவு தரப்பினர் குற்றம்சாட்டினர்