தினமணி பத்திரிகையை விரட்டி விரட்டி வெளுக்கும் உடன்பிறப்புகள்! உதயநிதி தியாகியாமே!

தி.மு.க. என்பது சங்கரமடமல்ல என்று கருணாநிதி சொன்னார். தந்தை சொல்லை ஸ்டாலின் கேட்க மாட்டார் என்பது போல், அவரது மகனுக்குப் பதவி கொடுத்து, சங்கரமடமாகவே தி.மு.க.வை மாற்றிவிட்டார்.


உடனே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் உதயநிதியை தியாகி ரேஞ்சுக்கு பாராட்டி வாழ்த்தி வருகிறார்கள். இந்த நேரத்தில் தினமணி பத்திரிகை உதயநிதியை எதிர்த்து ஒரு கட்டுரை எழுதிவிட்டது. அம்புட்டுத்தான், தி.மு.க. ஐ.டி. விங்க் பொங்கி எழுந்திருக்கிறது. இதோ அவர்களுடைய பொங்கலில் ஒரு பங்கு. திமுகவின் புதிய இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டவுடன். 

பட்டத்து இளவரசராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதாக. நஞ்சை உமிழும் ஆதிக்கசாதி தினமணி நாளிதழ் வழக்கம்போல எள்ளி நகைப்போடு ஏற்கனவே எழுதி வைத்திருந்த தனது தலையங்கத்தை எழுதியுள்ளது. தினமணி இப்படி எழுதியதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.! ஏனென்றால் ஆரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தினமணியின் எழுத்தாளர்களுக்கு. திராவிடத்தின் விழுதுகளை பார்த்தாலே சுவற்றோடு ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு வெறுப்பு வருவது இயற்கையான ஒன்றுதான்.

ஆனால். ஸ்டாலின் அவர்களால் உருவாக்கப்பட்ட திமுக இளைஞர் அணியின் செயலாளர் பதவியை. இவ்வளவு அவசரமாக ஏன் உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட வேண்டும்? என்று ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறது அந்த கட்டுரையின் தலையங்கம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன். தமிழகத்தின் ஆளுங்கட்சியான அஇஅதிமுகவில் திடீரென்று தேனி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறார் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத். இவ்வளவு அவசரமாக ஏன் ரவீந்திரநாத் மனு செய்ய வேண்டும். கட்சியில் யாருக்கும் அந்த தொகுதியில் அதிகாரம் இல்லையா? என்று தினமணிக்கு எழுத துணிவு இல்லை அன்று.!

நாங்கள் அரசியல் நடத்தினாலும். ஆட்சியில் நானோ! எனது வாரிசுகளோ! பங்கேற்க மாட்டார்கள். அப்படி பங்கெடுத்தால். நடுரோட்டில் வைத்து சாட்டையால் அடியுங்கள்.! என்று மக்கள் முன்னால் பகிரங்கமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார் மருத்துவர் அய்யா திரு ராமதாஸ் அவர்கள்.! இரண்டு முறை மத்திய அரசில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தபோது அதைப் பற்றி கேள்வி கேட்க துணிவு இல்லாத தினமணிக்கு. திராவிடர்களை கண்டால் கோபம் வரத்தான் செய்யும்.!

குஜராத் குற்றவாளி என்று குஜராத் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட அமித்ஷா அவர்களின் மகன் செய்த ஊழலையும். அரசியலில் அவருக்கு உள்ள அதிகாரத்தின் உச்சத்தையும் எழுதுவதற்கு தினமணிக்கு துணிவிருக்காது.! பூனம் மஹாஜன் - பிஜேபி முன்னாள் அமைச்சர் பிரமோத் மஹாஜன் மகள் - 36 வயதில் பிஜேபி இளைஞரணித் தலைவராக நியமிக்கப்பட்டார். தர்மேந்திர பிரதான்- முன்னாள் மத்திய பிஜேபி அமைச்சர் தேபேந்திர பிரதான் மகன் - 36 வயதில் பிஜேபி இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டார்.அனுராக் சிங் - ஹிமாச்சல் முன்னாள் முதல்வர் பிரேம் சிங் மகன் - 36 வயதில் பிஜேபி இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டார். ஆக. தமிழகத்தில் ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள் மக்களின் வாழ்வாதாரங்களை அழைத்துக் கொண்டு இருந்தாலும். ஆரியர்களின் ஒரே ஆயுதம்.! திராவிடர்களை வசைபாடுவது மட்டும்தான்.!

இதில் தினமணி ஒன்றும் விதிவிலக்கல்ல. ஏதோடு சேர்ந்த இன்னொன்றும் நாற்றமடிக்கும் என்பதுபோல. திராவிட எதிரிகளோடு சேர்ந்த தினமணியும். அதன் எழுத்தாளர்களும். திராவிடத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் விமர்சனம் செய்ய மூக்கின் மேல் விரலை வைத்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த விமர்சனங்களுக்கு அடங்கிப் போனவர்கள் திராவிடர்கள் அல்ல. விமர்சனங்களால் எழுந்த கேள்விகளை உடைத்து. வெற்றி கோட்டையை கண்டவர்கள் திராவிடர்களும். திமுகழகமும்.

தினமணியின் தலையங்கத்தில் வரும் ஒரு பத்தியில். கோபாலபுரம் இளைஞர்கள் நற்பணி மன்றம் என்று ஆரம்பித்து. இளைஞர்களை ஒருங்கிணைத்த திரு மு க ஸ்டாலின். எமெர்ஜென்சி போராட்டத்திற்கு பிறகே அரசியலில் பெரிதாக வலம்வர தொடங்கியதாக ஒரு பொய்யான பரப்புரையை தனது கட்டுரையில் எழுதி இருக்கிறது. 

தினமணிக்கு வரலாறு தெரியாது போலும்.! மதுரை மாநாட்டில் திமுக இளைஞரணி கழகம் என்று அறிவிப்பதற்கு முன்பே. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மு க ஸ்டாலின் சிறை பிடிக்கப் படுவதற்கு முன்பே.! திமுகழகத்தின் போராட்டங்கள் முன்னெடுத்த ஒவ்வொரு களத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு. முழு தொண்டனாய் ஆர்ப்பரித்த வேங்கையாக.! வீரப்பயணம் மேற்கொண்டவர் திரு தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள். எமெர்ஜென்சியை எதிர்த்த போராட்ட களத்தில். சிறையில் ஸ்டாலினுக்கு வைத்த குறியில். கழகத் தலைவரை காக்க உயிரிழந்த சிட்டிபாபுவை சிறைக்காவலர்கள் கொன்ற வரலாற்றை முழுமையாக மறைத்து எழுதியுள்ளது இந்த ஆரியஆதரவு பத்திரிகையான தினமணி

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல. ஏதோ எழுத வேண்டும். பக்கத்தை நிரப்ப வேண்டும். என்ற எண்ணத்தோடு எழுதியுள்ள தினமணியின் தலையங்கத்திற்கு பகிரங்கமாக ஒரு சவால் இது.!

திமு.கழகத்தின் இளைஞரணி பதவிக்கு பட்டத்து இளவரசராக உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வளவு அவசரமாக ஏன் பதவியை கொடுக்க வேண்டும். என்று எழுதத் தெரிந்த தினமணியின் எழுத்தாளர்களே.! திமு கழகம் அல்லாத. தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள வாரிசு அரசியல் பற்றியும். நீங்கள் ஆதரித்து எழுதும் பாஜக அரசின் வாரிசு அரசியல் பற்றியும். எந்த இடத்திலாவது துணிவோடு எழுத முடியுமா உங்களால்.?

இந்த எழுத்து உரிமையைப் பெற்றுத் தர போராடியதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் என்று சேர்த்து கொள்ளுங்கள் உங்கள் வரிகளில். இன்னும் நிறைய எழுதுங்கள். எங்களின் நிறை குறைகளையும் எழுதுங்கள். குறைகளைத் திருத்திக்கொண்டு எதிர்கால ஆட்சியினை நிறைகளோடு நடத்திட. உங்களைப் போன்ற விமர்சனக்காரர்களும். ஆளுமைமிக்க எதிரிகளும் தான் எங்களுக்கு தேவை.!

தயவுசெய்து முதுகில் மட்டும் குத்தி விடாதீர்கள். நாங்கள் கோழைகள் அல்ல.உயிரே போனாலும் நெஞ்சை நிமிர்த்தி காட்டும் திராவிட வேங்கைகள் என்பதை எங்கள் எழுத்துக்கள் மூலமாகவும். செயல்கள் மூலமாகவும் அடுத்து அமையப் போகும் திமுகவின் ஆட்சியின் மூலமாகவும். உங்கள் பேனாக்களே பாராட்டி எழுதும் காலம் விரைவில் வரும் என்று கூறி எங்கள் திராவிட வரலாற்றினை எழுத வாய்ப்பளித்த தினமணி நாளிதழுக்கு நன்றி என்று எழுதியிருக்கிறார் மணியன் கலியமூர்த்தி.

நல்ல ஜால்ராப்பா...